»   »  இப்படில்லாம் சொன்னா விஷால் ஏத்துக்குவாரா???

இப்படில்லாம் சொன்னா விஷால் ஏத்துக்குவாரா???

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படம் வெளியாகி 3 நாட்களுக்கு பிறகு தான் விமர்சனம் செய்ய வேண்டும் என்ற விஷாலிடம் ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்.

3 நாட்களுக்குப் பிறகு தான் விமர்சனம் செய்ய வேண்டும் என்று விஷால் கூறியுள்ளார். நல்ல யோசனைதான். ஆனால் விஷாலை நோக்கி ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்கள் வைக்கிறார்கள்.

விஷாலின் கோரிக்கை நியாயமானது என்று தோன்றுவது போல, இவர்கள் வைக்கும் கேள்விகளும் கூட நியாமானதாகவே தோன்றுகிறது.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

படம் 3 நாள் ஓடட்டும். நன்றாக ஓடினால் அதற்குப் பிறகு சம்பளம் தருகிறோம் என்று தயாரிப்பாளர்கள் சொன்னால் அதை விஷால் ஏற்பாரா என்ன என ரசிகர்கள் கேட்கிறார்கள்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

3 நாள் படத்தை இலவசமாக பார்த்துக் கொள்கிறோம். படம் நன்றாக இருந்தால், பிடித்திருந்தால் டிக்கெட் கட்டணத்தை 3 நாட்களுக்கு சேர்த்து தருகிறோம் என்று தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சொன்னால் விஷால் ஏற்றுக் கொள்வாரா?

கட்டணம்

கட்டணம்

நீங்கள் எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும் நிர்ணயுங்கள். நாங்களும் தியேட்டருக்கு வந்து பார்க்கத் தயார். ஆனால் படம் நன்றாக இல்லையென்றால் கட்டணத்தைத் திருப்பித் தருவீர்களா என்று ரசிர்கள் கேட்டால் அதை விஷால் ஏற்பாரா.

சம்பளம்

சம்பளம்

தயாரிப்பாளர்கள் மீது அவ்வளவு அக்கறை இருந்தால் விஷால் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வாரா? படம் ஓடட்டும் ஓடிய பிறகு சம்பளத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று கூற சம்மதமா?

விமர்சனம்

விமர்சனம்

மக்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிடுகிறார் விஷால். அவரது கருத்து சுதந்திரத்தில் யாராவது தலையிட்டால் சும்மா இருப்பாரா? முதலில் பதில் சொல்லுங்க விஷால்?

English summary
Fans have a long list of questions after Vishal asked people to review movies three days after its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil