ஜென்டில்மேன் 2 ல் நயன்தாரா தான் ஹீரோயினா...அப்போ ஹீரோ ?

சென்னை : ஜென்டில்மேன் 2 படம் உறுதியாகி விட்டது. ஆனால் டைரக்டர் யார், ஹீரோ யார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகாத நிலையில், ஹீரோயினாக நயன்தாரா நடிக்க போவதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.

1993 ம் ஆண்டு டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், கே.டி.குஞ்சுமோன் தயாரித்த பிளாக்பஸ்டர் படம் ஜென்டில்மேன். அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், சரண்ராஜ், நம்பியார், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க போவதாக சமீபத்தில் கே.டி.குஞ்சுமோன் அறிவித்தார்.

ஜென்டில்மேன் 2 ஆரம்பமாயிடுச்சா

ஜென்டில்மேன் 2 ஆரம்பமாயிடுச்சா

ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. படம் பற்றி அறிவித்த குஞ்சுமோன், இசையமைப்பாளராக பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களுக்கு இசையமைத்த கீரவாணி இருப்பார் என அறிவித்தார். ஜென்டில்மேன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார். அவரை மாற்றி விட்டு தற்போது கீரவாணியை இந்த படத்திற்கு புக் செய்துள்ளார் குஞ்சுமோன்.

ஹீரோயின் நயன்தாராவா

ஹீரோயின் நயன்தாராவா

இதில் லேட்டஸ்ட் அப்டேட்டாக இந்த படத்தில் ஹீரோயின் ரோலில் நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டு வருகிறதாம். ஆனால் இதற்கு நயன்தாரா ஓகே சொல்லி விட்டாரா, இல்லையா என்பது பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய தேர்வும் நடந்து வருகிறதாம். விரைவில் படக்குழு பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.

டைரக்டர், ஹீரோ யாருப்பா

டைரக்டர், ஹீரோ யாருப்பா

ஆனால் ஜென்டில்மேன் 2 படத்தை இயக்க போகும் டைரக்டர் யார் என்பதை தயாரிப்பாளர் இதுவரை முடிவு செய்யவில்லையாம். அப்படி இருக்கும் போது நேரடியாக ஹீரோயினை முடிவு செய்ய பேச்சுவார்த்தை நடத்துவது ஏன் என புரியாமல் பலரும் குழம்பி வருகின்றனர்.

ஓகே சொல்வாரா நயன்தாரா

ஓகே சொல்வாரா நயன்தாரா

நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உடன் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீசிற்காக காத்திருக்கிறார். இதற்கு பிறகு அடுத்ததாக அஜித்தின் ஏகே 62 படத்தில் நயன்தாரா நடிக்க போவதாக கூறப்படுகிறது. அது தவிர வேறு எந்த படத்திலும் நயன்தாரா இதுவரை கமிட் ஆகவில்லை. ஏகே 62 படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதியானால் ஜென்டில்மேன் 2 படத்திற்கு ஓகே சொல்வது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X