»   »  சசிகலாவின் சொகுசு சிறைவாசத்தை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபாவாக நடிக்கும் நயன்தாரா?

சசிகலாவின் சொகுசு சிறைவாசத்தை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபாவாக நடிக்கும் நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்வதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த டிஐஜி ரூபாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க விரும்புகிறார் இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ்.

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்வதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் டிஐபி ரூபா. உடனே அவரை டிரான்ஸ்பர் செய்துவிட்டார்கள்.

இருப்பினும் தான் சொன்னது அனைத்தும் உண்மையே என்று கூறி ஆதாரங்களுடன் அறிக்கை சமர்பித்தார் ரூபா.

படம்

படம்

சசிகலாவின் ராஜபோக சிறைவாசம் பற்றி ரூபா வெளியுலகிற்கு தெரிவித்ததை மையமாக வைத்து கன்னட இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் படம் எடுக்கிறார்.

ரூபா

ரூபா

படம் எடுக்க ரமேஷ் ரூபாவிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளார். மேலும் ரூபாவின் குடும்பம் உள்ளிட்ட பிற விபரங்களை தெரிந்து கொள்ள ரமேஷ் அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

நன்றி

நன்றி

தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை வைத்து படம் எடுக்க உள்ள ரமேஷுக்கு ரூபா சமூக வலைதளம் மூலம் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா

நயன்தாரா

ரூபா கதாபாத்திரத்தில் நயன்தாரா அல்லது அனுஷ்காவை நடிக்க வைக்க விரும்புகிறார் ரமேஷ். கதை குறித்த வேலைகள் முடிந்த உடன் ஹீரோயின் ஒப்பந்தம் செய்யப்படும் என்று ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ரமேஷ்

ரமேஷ்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து படம் எடுப்பதற்கு பெயர் போனவர் ரமேஷ். சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையாக வைத்து வனயுத்தம் படத்தை இயக்கியவர் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director AMR Ramesh is making a movie on DIG Roopa who exposed the luxuries enjoyed by Sasikala in the Bengaluru prison.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil