»   »  அஜீத்துக்காக இன்னொரு விஷயத்திலும் அட்ஜஸ்ட் செய்வாரா நயன்தாரா?

அஜீத்துக்காக இன்னொரு விஷயத்திலும் அட்ஜஸ்ட் செய்வாரா நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜீத்துக்காக கொள்கையை தளர்த்தும் நயன்தாரா..!!

சென்னை: அஜீத்துக்காக இன்னொரு கொள்கையையும் தளர்த்துவாரா நயன்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிவா அஜீத் நான்காவது முறையாக சேர்ந்து பணியாற்றும் படம் விசுவாசம். படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என்றார்கள், பின்னர் பிப்ரவரி என்றார்கள். தற்போது மார்ச் மாதம் என்கிறார்கள்.

படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஹீரோக்கள்

ஹீரோக்கள்

பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்ற கொள்கையுடன் உள்ளார் நயன்தாரா. பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தால் அவர்களை காதலித்து டான்ஸ் ஆடுவதுடன் தனது வேலை முடிந்துவிடும் என்பதால் இப்படி ஒரு முடிவு.

விசுவாசம்

விசுவாசம்

அஜீத் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்பதால் தனது கொள்கையை தளர்த்தி அவருக்கு ஜோடியாக விசுவாசம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நயன்தாரா.

சென்டிமென்ட்

சென்டிமென்ட்

தன்னுடைய படங்களின் விளம்பர நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அந்த படம் பப்படமாகிவிடும் என்று பயப்படுகிறார் நயன்தாரா. அதனால் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே விளம்பரத்திற்கு வர மாட்டேன் என்று கறாராக கூறிவிடுகிறார்.

ஹிட்

ஹிட்

அறம் படத்திற்கு மட்டும் தனது பயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு விளம்பரம் செய்தார். அவர் பயந்தது போன்று இல்லாமல் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் அவர் விசுவாசம் படத்திற்காகவும் தனது கொள்கையை மீண்டும் தளர்த்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹீரோயின்

ஹீரோயின்

அஜீத் எப்படியும் ப்ரமோஷனுக்கு வரமாட்டார். நயன்தாராவும் அதே கொள்கை உடையவர். ஆனால் அஜீத்துக்காக இன்னொரு கொள்கையையும் தளர்த்தி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Will Nayanthara relax one more rule for Ajith's upcoming movie Viswasam to be directed by Siva. Nayanthara tells her directors that she won't attend any event related to the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil