»   »  தயாரிப்பாளர்கள் புகார்... சம்பளத்தைக் குறைப்பாரா நம்பர் ஒன் நயன்தாரா?

தயாரிப்பாளர்கள் புகார்... சம்பளத்தைக் குறைப்பாரா நம்பர் ஒன் நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சம்பளத்தைக் குறைப்பாரா நம்பர் ஒன் நயன்தாரா?- வீடியோ

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த கோரிக்கைக்கு உடன்பட்டு சில சூர்யா உள்ளிட்ட சில நடிகர்கள். தங்கள் உதவியாளர்களுக்கான சம்பளம், படிகளை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Will Nayantharas salary reduce after strike?

நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாராதான். அவரது உதவியாளர்களுக்கும் அதிக சம்பளம் தரப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதே நேரம் நயன்தாரா நடித்த படங்கள் நன்றாக ஓடி வசூல் குவிக்கின்றன. தெலுங்கிலும் அவரது படங்களுக்கு வரவேற்பு உள்ளது. அவரது படங்களுக்கு இரு மொழிகளிலும் நல்ல வியாபாரம் உள்ளது.

நயன்தாரா தற்போது ரூ.5 கோடி வரை சம்பளமாகப் பெறுகிறார் என்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ் படத் தயாரிப்பாளர்கள் நடிகைகள் சம்பளமும் குறைக்கப்படகுறைக்க வேண்டும், அவர்களின் உதவியாளர்கள் சம்பளமும் குறைக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.

நயன்தாராவின் சம்பளம் தவிர அவரது உதவியாளர்களுக்கு ஒரு படத்துக்கு ரூ.50 லட்சம் அல்லது ரூ.1 கோடி என்று கூடுதலாக கொடுக்க வேண்டி உள்ளது என்றும் தெரிவித்தனர்.

English summary
Producers have urged to reduce the salary of Nayanthara and her assistants

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X