»   »  வாகா, ஜோக்கர், முடிஞ்சா இவனப்புடியை தோற்கடிப்பாரா 'செல்வி' நயன்தாரா?

வாகா, ஜோக்கர், முடிஞ்சா இவனப்புடியை தோற்கடிப்பாரா 'செல்வி' நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் பிரபு நடித்த வாகா, குக்கூ இயக்குனரின் ஜோக்கர், கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள முடிஞ்சா இவனப்புடி ஆகிய படங்கள் இன்று ரிலீஸாகின்றன.

Will Nayanthara taste success this friday?

விக்ரம் பிரபு, ரன்யா ராவ் நடித்துள்ள வாகா படம் இன்று ரிலீஸாகிறது. இந்த படத்தை ராணுவ வீரர்களின் துணையுடன் வாகா எல்லையில் எடுத்துள்ளனர். மேலும் குக்கூ படத்தை இயக்கிய ராஜு முருகனின் ஜோக்கர் படமும் இன்று வெளியாகிறது.


Will Nayanthara taste success this friday?

இந்த படம் அரசியல் சாட்டையடியாக இருக்குமாம். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள முடிஞ்சா இவனப்புடி படமும் இன்று ரிலீஸாகிறது.


Will Nayanthara taste success this friday?

ரவிக்குமாரின் படம் பார்ப்பவர்களை வயிறு வலிக்க சிரிக்கை வைக்கும் என்று கூறப்படுகிறது. இது தவிர பாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அக்ஷய் குமாரின் ருஸ்தம் மற்றும் ரித்திக் ரோஷனின் மொஹஞ்ஜதரோ ஆகிய படங்களும் இன்று ரிலீஸாகின்றன.


Will Nayanthara taste success this friday?

நயன்தாரா, வெங்கடேஷ் நடித்த படம் பாபு பங்காரம் என்ற பெயரில் தெலுங்கிலும், செல்வி என்ற பெயரில் தமிழிலும் இன்று வெளியாகின்றது.

English summary
Vikram Prabhu's Wagah, Raju Murugan's Joker, KS Ravikumar's Mudinja Ivanapudi, Nayanthara's Selvi are hitting the screens today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil