»   »  நடிகர் சங்கம் விஷயத்தில் விஜய், அஜித்துக்கு அட்வைஸ் செய்யமாட்டேன்- கமல்ஹாசன்

நடிகர் சங்கம் விஷயத்தில் விஜய், அஜித்துக்கு அட்வைஸ் செய்யமாட்டேன்- கமல்ஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கம் விஷயத்தில் விஜய், அஜித்துக்கு நான் அட்வைஸ் செய்ய மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

கமல்ஹாசன்-ஸ்ருதிஹாசன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் 'சபாஷ் நாயுடு' படத்தின் பூஜை நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கமல்ஹாசன், இளையராஜா, ஸ்ருதிஹாசன், நாசர், விஷால் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

சபாஷ் நாயுடு

சபாஷ் நாயுடு

கமல்ஹாசன்-ஸ்ருதிஹாசன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா 'சபாஷ் நாயுடு' என்று பெயர் சூட்டியிருக்கிறார். இப்படத்தின் படபூஜை நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. படத்துக்கு பெயர் வைத்த இளையராஜா 'நீடுழி வாழ வேண்டும்' என கமல்ஹாசனை வாழ்த்தினார். கமல்ஹாசன்-இளையராஜா இருவரும் 11 ஆண்டுகள் கழித்து 'சபாஷ் நாயுடு' படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.

லைக்கா 1 கோடி

லைக்கா 1 கோடி

இப்படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம் நடிகர் சங்கத்திற்கு நிதியாக 1 கோடியை வழங்கியது. லைக்கா நிதி வழங்கிய பின் 'நடிகர் சங்கம் கட்டுவதற்கு இவ்வளவு விரைவாக 1 கோடி நிதி கிடைக்க நீங்கள் தான் காரணம்' என்று கமல்ஹாசனின் காலில் விழுந்து விஷால் வணங்கினார்.

2.5 லட்சம்

2.5 லட்சம்

நடிகர் சங்க வளாகத்தில் படபூஜையைத் தொடங்கிய கமல்ஹாசன் 2.5 லட்சத்தை வாடகையாக நடிகர் சங்கத்திற்கு வழங்கினார். விழாவில் கமல்ஹாசன் பேசும்போது "விஜய், அஜித்துக்கு நடிகர் சங்க கதவு எப்போதும் திறந்து இருக்கிறது. இருவரும் எங்களது சகோதர்கள் தான்.

நடிகர் சங்கம்

நடிகர் சங்கம்

நடிகர் சங்கம் விஷயத்தில் விஜய், அஜித்துக்கு நான் அட்வைஸ் செய்யமாட்டேன். நட்சத்திர கிரிக்கெட்டுக்கு இருவரும் வராததுக்கு காரணம் இருக்கலாம். சட்டமன்றத் தேர்தலில் என் ரசிகர்கள் அவரவர் விருப்படி ஓட்டு போடணும். எனக்கு கடந்த தேர்தலில் ஓட்டு இல்லை. இந்த முறை எப்படி என்று தெரியவில்லை" என்று பேசினார்.

ஸ்ருதி, அக்ஷரா

ஸ்ருதி, அக்ஷரா

கமல்-ஸ்ருதி நடிக்கும் இப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் உதவி இயக்குநராகப் பணியாற்றவுள்ளார். இதன்மூலம் கமலின் 2 மகள்களும் இப்படத்தில் பங்குபெறுவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் 90% படப்பிடிப்பை வெளிநாட்டிலும், 10% படப்பிடிப்பை இந்தியாவிலும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

English summary
'Regarding Nadigar Sangam Will not Advice to Vijay and Ajith' Kamal Haasan says in Sabash Naidu Press Meet Function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil