எங்கிட்டேயும் ஒரு காயின் இருக்கு.. பிக் பாஸ் வீட்டையே வச்சு செய்ய காத்திருக்கும் பாவனி!
சென்னை: நெருப்பு ஆற்றலோடு இந்த வாரம் வீட்டை கட்டி ஆண்ட இசைவாணிக்கு எதிராக பாவனி பேசிய பேச்சு பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த 5வது சீசன் லோகோவிலேயே பஞ்ச தந்திர காயின்கள் உள்ளன. இந்த சீசன் முழுவதும் இனி இப்படித் தான் செல்லும் என்பது இதில் இருந்து தெளிவாக புரிந்துள்ளது.
நெருப்பு ஆற்றலை கொண்டு முதல் வாரத்தை இசைவாணி சரியாக செய்த நிலையிலேயே பல பேருக்கு அவர் மீது கோபம் வரும் நிலையில், இனி வரும் வாரங்களில் பிக் பாஸ் வீடு எப்படி மாறப் போகிறது என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

5வது சீசன் கான்செப்ட்
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 5வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. 5வது சீசன் என்பதால் பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாக கொண்டே இந்த நிகழ்ச்சியின் இயக்குநர் இந்த சீசனை வடிவமைத்துள்ளார். நெருப்பு, நீர், காற்று, ஆகாயம், நிலம் எனும் பஞ்ச பூத ஆற்றல் இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்ல போகிறது என்பது தான் இந்த சீசனின் ஹைலைட்.

நெருப்பு ஆற்றல்
நெருப்பு காயினை வைத்திருக்கும் இசைவாணி இந்த வாரம் நெருப்பு ஆற்றலை பயன்படுத்தி பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் அவர் சொல்வதை கேட்கும் படி கடைசி வரை கெஞ்சிக் கொண்டே இந்த வாரத்தை கடந்து விட்டார். பிக் பாஸ் அழைத்து சொன்ன பிறகும் ருத்ர தாண்டவம் ஆடாமல் இசைவாணி கெஞ்சியதை பார்த்தே இமான் அண்ணாச்சி, தாமரை செல்வி மற்றும் அக்ஷரா உள்ளிட்டோர் அவர் சர்வாதிகாரம் செய்கிறார் என நினைத்து கொண்டனர்.

இசை பாவனி பிரச்சனை
இசைவாணி நெருப்பு காயினை எடுத்து வந்து வைப்பதற்கு முன்பாகவே கிச்சனில் இமான் அண்ணாச்சி, நிரூப், தாமரை செல்வி மற்றும் பாவனி உள்ளிட்டோர் சமையல் வேலையை இந்த வாரம் செய்து வந்தனர். இதில், இசைக்கும் பாவனிக்கும் இடையே வெள்ளிக் கிழமை எபிசோடில் சின்ன பிரச்சனை ஏற்பட்டது.

எங்கிட்டேயும் காயின் இருக்கு
கிச்சன் ஏரியாவில் இசைவாணியை கேட்காமல் பாவனி சமையல் செய்து கொண்டிருந்த நிலையில், இசையை கேட்காமல் நீங்க எப்படி சமைக்கிறீங்க என அவர் கேட்கிறார் என பாவனியிடம் சொல்ல, எங்கிட்டேயும் காயின் இருக்கு அப்போ அவங்களும் ஃபீல் பண்ணுவாங்க என பாவனி பேசியது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

பத்ர காளியாக மாறுவாரா
அடுத்த வாரம் எந்த காயினோட ஆற்றல் என்பது இதுவரை பிக் பாஸ் சொல்லவில்லை. ஒரு வேளை பாவனியோட வாரமாக இருந்தால் அவர் தனது மொத்த பவரையும் காட்டி பத்ர காளியாக மாறி பிக் பாஸ் வீட்டையே ஒரு வழி பண்ணுவாரா? இல்லை வழக்கம் போல சண்டையை ஆரம்பித்து விட்டு அழுகாச்சியை ஆரம்பித்து விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











