twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நோட்டா'வை எதிர்க்க முடியாத அளவுக்கு அரசியல்வாதிகளுக்கு 'செக்' வைத்த விஜய்

    |

    சென்னை: விஜய் தேவரகொண்டா சொல்வதை பார்த்தால் அரசியல் கட்சியினர் நோட்டா படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்களோ?

    தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா நோட்டா படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். வரும் 5ம் தேதி நோட்டா படம் ரிலீஸாகிறது. தலைப்பை பார்த்தாலே இது அரசியல் சார்ந்த படம் என்பது அனைவருக்கும் புரியும்.

    படத்தில் வைக்கப்பட்டுள்ள சில காட்சிகள் குறித்து விஜய் தெரிவித்துள்ளார்.

    கும்பிடு

    கும்பிடு

    தலைவர் புகைப்படத்தை அக்கட்சியினர் தங்களின் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருப்பதை படத்தில் காண்பித்துள்ளனர். அது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் தலைவரை பார்த்ததும் கும்பிடு போடும் கட்சியினரை பார்த்து நாசர் நிமிர்ந்து என் முகத்தை பாருங்கய்யா, இல்லை என்றால் எனக்கு சிலை செய்தால் என் முகத்திற்கு பதில் வேறு யார் முகத்தையாவது வைத்துவிடுவீர்கள் என்று கூறும் காட்சி உள்ளது.

    யாருக்கு?

    யாருக்கு?

    தமிழகத்தில் யாரை பார்த்தால் கட்சியினர் இந்த அளவுக்கு குனிந்து கும்பிடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி கும்பிடு போட்டவர்கள் சிலை வைத்தது ஒருவருக்கு ஆனால் அதன் முகம் வேறு ஒருவர் போன்று இருந்த கொடுமை இங்கு நடந்துள்ளது. இதை தான் கிண்டல் செய்து படத்தில் காட்சி வைத்துள்ளனர்.

    விஜய்

    விஜய்

    படத்தில் வரும் காட்சிகளை பார்த்தால் தவறு செய்தவர்களுக்கு மட்டுமே உறுத்தும். மற்ற அரசியல்வாதிகள் பொது மக்களுடன் சேர்ந்து ரசிக்கும்படி இருக்கும் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். அப்படி என்றால் நோட்டா படத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து இலவச விளம்பரம் கொடுக்க மாட்டார்களா?

    தவறு

    தவறு

    நோட்டா படத்தை எதிர்த்து பேட்டி கொடுத்தால் விஜய் தேவரகொண்டா கூறியது உண்மையாகிவிடும். தவறு செய்ததை தாமாக வந்து ஒப்புக் கொண்டது போன்றாகிவிடும். அதனால் படம் வந்தாலும் அப்படியொரு படம் வரவில்லை என்று நினைத்துக் கொள்வார்களா?. பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Will politicians stay away from Vijay Deverakonda 's Tamil debut movie NOTA?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X