பொன்னியின் செல்வன் டீசர் அறிவிப்பு இன்று வருமா...ஹாட் தகவல்களால் பரபரப்பில் ரசிகர்கள்

சென்னை : பொன்னியின் செல்வம் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் என்பது உறுதியாகி விட்டது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகளும் நடந்து வருகிறது.

மோஷன் போஸ்டரை தொடர்ந்து தினம் ஒரு கேரக்டரின் போஸ்டருடன் அறிமுகம் நடந்து வருகிறது. ஆதித்ய கரிகாலன் ரோலில் நடிக்கும் விக்ரம், வந்தியத்தேவன் ரோலில் நடிக்கும் கார்த்தி, நந்தினி ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய், குந்தவை ரோலில் நடிக்கும் த்ரிஷா ஆகியோரின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று, #PonniyinSelvan என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து 4 நாட்களாக ட்விட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது. போஸ்டர்கள் பற்றியும், கேரக்டர்கள் பற்றியும் தங்களின் கருத்துக்களையும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

டீசர் எப்போ வரும்

டீசர் எப்போ வரும்

இருந்தாலும் டீசர் ரிலீஸ் எப்போ வரும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் டீசர் ரிலீஸ் பற்றி பல தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. அதாவது, டீசர் வெளியீட்டு விழா முதலில் தஞ்சை பெரிய கோயிலில் நடத்த திட்டமிடப்பட்டதாகவும், தஞ்சை கோயில் சென்டிமென்ட் காரணமாக விஐபி.,க்கள் பலரும் தஞ்சை வருவதற்கு தயங்கியதால் அந்த பிளான் கைவிடப்பட்டதாகவும் குறப்பட்டது.

நாளை டீசர் ரிலீசா

நாளை டீசர் ரிலீசா

அதைத் தொடர்ந்து, தஞ்சைக்கு பதிலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பொன்னியின் செல்வன் டீசர் நாளை (ஜுலை 8) மாலை 6 மணிக்கு நடக்க உள்ளதாக லேட்டஸ்டாக ஒரு தகவல் காட்டு தீயை விட வேகமாக சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. சிறிய அளவில் நடத்தப்படும் இந்த விழாவில் முதல் டீசர் வெளியிடப்பட உள்ளதாக குறப்படுகிறது.

இது சுப்பர் தகவலா இருக்கே

இது சுப்பர் தகவலா இருக்கே

மற்றொரு தகவலாக சென்னை டிரேட் சென்டரில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா நடக்க உள்ளதாகவும், இந்த விழாவில் ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. படத்தின் மீதான சஸ்பென்சை உடைக்க வேண்டாம் என்பதற்காக தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறப்படுகிறது.

ஆஹா...இது புதுசா இருக்கே

ஆஹா...இது புதுசா இருக்கே

இந்த டீசர் 9 நிமிடங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தான் நடித்த அதே கேரக்டர்களின் கெட்அப்களில் வந்து மேடையை அலங்கரிக்க போகிறார்களாம். ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் கேரக்டர்களின் அறிமுகம் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் டீசர் வெளியீடு நாளை நடக்கிறதா இல்லையா என்பது பற்றி படக்குழு இதுவரை எந்த அறிவிப்பு வெளியிடவில்லை.

Recommended Video

Ponniyin Selvan | பின் வாங்குற பேச்சுக்கே இடமில்லை *Kollywood | Filmibeat Tamil
நம்பிக்கையில் ரசிகர்கள்

நம்பிக்கையில் ரசிகர்கள்

இன்று 12 மணிக்கு வெளியாகும் போஸ்டரில் டீசர் ரிலீஸ் வரும் என எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி ஏதும் வரவில்லை. வழக்கமாக மற்ற நடிகர்களுக்கு வெளியிட்டதை போல் த்ரிஷா, குந்தவை கேரக்டரில் நடிக்கிறார் என்ற அறிமுக போஸ்டர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், தற்போது வரை நாளை பொன்னியின் செல்வன் டீசர் வெளியிடப்பட உள்ளதாக நம்பிக்கையுடன் குறி வருகின்றனர்.அது மட்டுமல்ல டீசருக்கு முன் ராஜமெளலி ஸ்டைலில் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டால் மாசாக இருக்கும் என குறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X