பிரியங்காவுக்கு டைட்டில் கிடைக்குமா? உடல்நலக் குறைவு உண்மையா? நாடகமா? கிளம்பியது விவாதம்!

சென்னை: எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் பூடகமாக சொல்லி வந்தது கிராண்ட் ஃபினாலேவில் எதிரொலிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அன் அஃபிஷியல் போலிங்கில் அமீர் கடைசி இடத்தில் இருந்த நிலையில், தற்போது நிரூப் வெளியேற்றப்பட்டிருப்பதாக வந்த தகவல் நிகழ்ச்சியில் மேலும், பல பொசிஷன்களும் இடம்மாறும் என்பதற்கு வழிவகுத்து இருக்கிறது.

பிக் பாஸ் டைட்டில் வின்னராக பிரியங்காவை மாற்றத்தான் கடந்த சில நாட்களாக திடீர் நாடகம் போடப்பட்டு இருக்கலாம் என்றும் விவாதங்கள் கிளம்பி உள்ளன.

5வது இடத்தில் நிரூப்

5வது இடத்தில் நிரூப்

ஏகப்பட்ட பிக் பாஸ் சீசன்களை பார்த்து ஒட்டுமொத்தமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்காகவே தயாராகி வந்த நிரூப் கடைசி கிராண்ட் ஃபினாலே நாள் வரை தாக்குப்பிடித்து விட்டார். அமீரை விட குறைவான ஓட்டுக்களை பெற்று நிரூப் வெளியேறி உள்ளாரா? என்பதே ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இதே பிளான் டாப் 2 இடங்களிலும் பிரதிபலிக்குமா? என்கிற கேள்வியை கிளப்பி உள்ளது.

ரோஜா மட்டுமே

ரோஜா மட்டுமே

ராஜு ஜெயமோகனுக்குத் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 டைட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கடைசியில் செந்தூரப்பூவே, ஈரமான ரோஜாவே 2 டீம் கொடுத்த ரோஜாக்கள் மட்டுமே ராஜுவுக்கு கிடைக்கப் போகிறதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி நடந்தால் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மீது நம்பிக்கை முற்றிலுமாக இழக்கக் கூடும் என்று ராஜுவின் ஆர்மியினர் கொந்தளித்து வருகின்றனர்.

யாருக்கு டைட்டில்

யாருக்கு டைட்டில்

ராஜு அல்லது பிரியங்கா இருவரில் ஒருவருக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என்பது தெளிவாகி உள்ளது. பிரியங்கா உடல் நலன் சரியில்லை என வெளியேறிய நிலையில், மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிற கான்செப்ட்டுக்கு ஏற்றவாறு பிரியங்காவுக்கு டைட்டில் கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அதுக்குத்தான் டிராமாவா?

அதுக்குத்தான் டிராமாவா?

சர்கார் படத்தில் கடைசி நேரத்தில் விஜய் கட்சிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மக்களும் எழுந்து வந்து ஓட்டுப் போட்டதை போல பிரியங்கா உடல் நலம் சரியில்லாத நிலையில், அவருக்கு அதிகமான மக்கள் ஓட்டுப் போட்டு வெற்றிபெற வைத்து விட்டார்கள் என கமல் கதை சொல்லத்தான் இந்த உடல் நலக் குறைவு டிராமாவா? என ராஜு ரசிகர்கள் கேள்வி எழுப்பி பிக் பாஸ் டீமை கழுவி ஊற்றி வருகின்றனர்.

பாதிக்கு பாதி ஓட்டு

பாதிக்கு பாதி ஓட்டு

ராஜு ஜெயமோகன் 42 சதவீதம் ஓட்டுக்களை பெற்று முதலிடத்தில் இருந்த நிலையில், பிரியங்கா வெறும் 20 சதவீதம் ஓட்டுக்களை மட்டுமே பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆனால், அன் அஃபிஷியல் ஓட்டுக்களை எல்லாம் விஜய் டிவி ஒருபோதும் கருத்தில் கொள்ளவே தேவையில்லை. பிக் பாஸ் டீம் முடிவு செய்பவர் தான் வின்னர் என கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

டிஆர்பி டிராமா

டிஆர்பி டிராமா

பிரியங்காவுக்கு டைட்டில் கிடைத்தால் அது நிச்சயம் உடல் நலக் குறைவு டிராமா தான் என்றும் ஒருவேளை ராஜு ஜெயமோகனுக்கே டைட்டில் கிடைத்தால் விஜய் டிவி கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்காக செய்த டிஆர்பி டிராமா என்றும் நெட்டிசன்கள் எப்படி விஜய் டிவி காய் நகர்த்தினாலும் செக் வைக்கும் விதமாக கணிப்புகளை கமெண்ட்டுகளில் போட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள சமூக வலைதளங்களில் கவனமாக அதிக நேரத்தை செலவழித்து வருகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். நாளை கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வதை விட இன்றே கசியும் தகவல் தான் ரசிகர்களுக்கு தற்போது அதிக ஆர்வத்தை தூண்டி வருவது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 டைட்டில் யாருக்கு?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X