»   »  9ம் தேதி வருகிறார் ருத்ரமா தேவி: தாக்குப்பிடிக்குமா விஜய்யின் 'புலி'?

9ம் தேதி வருகிறார் ருத்ரமா தேவி: தாக்குப்பிடிக்குமா விஜய்யின் 'புலி'?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுஷ்கா நடித்துள்ள சரித்திர படமான ருத்ரமா தேவி வரும் 9ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் விஜய்யின் புலியால் அதை தாக்குப்பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

விஜய் பேன்டஸி படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியிட்டதுமே அந்த படம் பற்றி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் புலி படத்திற்கு முன்பு ரிலீஸான பாகுபலி படம் விஷுவல் எஃபெக்ட்ஸில் கலக்கிவிட்டதால் விஜய்யின் படம் டல்லடித்துவிட்டது.


புலி படத்திலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணியை பார்த்து பார்த்து செய்துள்ளபோதிலும் பாகுபலியுடன் ஒப்பிடுகையில் அது எடுபடவில்லை.


பாகுபலி

பாகுபலி

புலியை பாகுபலியுடன் ஒப்பிடாதீர்கள் என்று ஹன்சிகா உள்ளிட்ட படக்குழுவினர் மக்களை கேட்டுக் கொண்டனர். ஆனால் தியேட்டருக்கு செல்பவர்கள் புலியை பாகுபலியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால் படத்தின் மவுசு தற்போதே குறைந்துவிட்டது.


விஜய்

விஜய்

புலி படத்தில் விஜய் அவரது பங்கை அழகாக செய்துள்ளார். ஆனால் ஒரு பெரிய ஸ்டாரான அவரை இன்னும் சிறப்பாக காட்டியிருக்கலாமே என்பது தான் ரசிகர்களின் வருத்தம். இந்நிலையில் சமூக வலைதளங்களில் புலி படம் சுமார், ஏமாற்றம் என்று ஆளாளுக்கு கிளப்பிவிட படத்தை வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு தான் பகீர் என்று ஆகியுள்ளது.


ருத்ரமா தேவி

ருத்ரமா தேவி

புலி படம் ரிலீஸான 5 நாட்களிலேயே அதன் நிலைமை மோசமாகியுள்ளது. இந்நிலையில் ரூ.80 கோடி செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள ருத்ரமா தேவி படம் வரும் 9ம் தேதி தமிழ், தெலுங்கில் ரிலீஸாகிறது.
அனுஷ்கா

அனுஷ்கா

சரித்திர படமான ருத்ரமா தேவியில் அனுஷ்கா அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று கூறப்படுகிறது. படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ருத்ரமா தேவியின் வீரம், வேகத்திற்கு முன்பு புலி நிற்குமா என்ற சந்தேகத்தில் பலரும் உள்ளனர்.


English summary
Anushka starrer Rudrama Devi will hit the screens on october 9th. Many of the Kollywood fans doubt whether Vijay's Puli can keep its place in the theatres.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil