»   »  சி3யை லைவாக வெளியிட்டால் சிறையில் தள்ளுவேன்: தமிழ் ராக்கர்ஸுக்கு ஞானவேல்ராஜா சவால்

சி3யை லைவாக வெளியிட்டால் சிறையில் தள்ளுவேன்: தமிழ் ராக்கர்ஸுக்கு ஞானவேல்ராஜா சவால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கம் 3 படத்தை மட்டும் லைவ் ஸ்ட்ரீம் செய்து பாருங்கள் தமிழ் ராக்கர்ஸ். உங்களை பிடித்து சிறையில் அடைக்காமல் விட மாட்டேன் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சவால் விட்டுள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ள சிங்கம் 3 படம் தள்ளித் தள்ளிப் போய் ஒரு வழியாக வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அந்த படத்தை 9ம் தேதி காலை 11 மணிக்கு ஃபேஸ்புக் லைவில் வெளியிடுவோம் என்று படங்களை ரிலீஸான உடன் இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.


இதை கேட்ட படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருப்பதாவது,


சிங்கம் 3

சிங்கம் 3

சூர்யாவின் சிங்கம் 3 படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. தமிழ் ராக்கர்ஸ் என்னும் நபர் படத்தை ரிலீஸான அன்றே காலை 11 மணிக்கு லைவாக வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.
சிறை

சிறை

என் படத்தை மட்டும் லைவாக வெளியிட்டால் அடுத்த 6 மாதத்திற்குள் உங்களை பிடித்து சிறையில் தள்ளாமல் விட மாட்டேன். அந்த காட்சியை நான் லைவாக வெளியிடுவேன்.


தேர்தல்

தேர்தல்

தேர்தல் வருகிறது. என்ன செய்ய வேண்டும் என்பது நன்கு தெரியும். படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுபவர்களை மக்களும் எதிர்க்க வேண்டும். படத்தை தயவு செய்து தியேட்டர்களில் மட்டும் பார்க்கவும்.


கண்டிப்பாக

கண்டிப்பாக

தமிழ் ராக்கர்ஸ் உங்களை சிறையில் தள்ளாமல் விட மாட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதை என் சவாலாக எடுத்துக் கொள்ளவும் தமிழ் ராக்கர்ஸ் என ஞானவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.


English summary
Producer Gnanavel Raja said that if Tamil Rockers live stream Suriya's Si3, then he will find them and put them behind bars for sure.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil