»   »  அடேங்கப்பா ரஹ்மானுக்கு இம்புட்டு பெரிய மகள்களா?

அடேங்கப்பா ரஹ்மானுக்கு இம்புட்டு பெரிய மகள்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் ரஹ்மானின் இரண்டு மகள்களுக்கும் நடிகையாக வேண்டும் என்ற ஆசை உள்ளதாம்.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் ரஹ்மான். ரொம்ப நாள் கழித்து ரஹ்மானுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் கார்த்திக் நரேனின் துருவங்கள் 16.

இந்நிலையில் ரஹ்மான் மலையாள பத்திரிக்கைக்கு குடும்பத்துடன் பேட்டி அளித்துள்ளார்.

நடிப்பு

நடிப்பு

ரஹ்மானின் இரண்டு மகள்களுக்கும் நடிகையாக வேண்டும் என்று ஆசையாக உள்ளதாம். இருவருக்குமே மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தான் மிகவும் பிடிக்குமாம்.

துல்கர்

துல்கர்

நீங்களும், மம்மூட்டியும் சேர்ந்து நடித்துள்ளீர்கள். அதே போன்று உங்களின் மூத்த மகள் ருஸ்தாவும், துல்கர் சல்மானும் சேர்ந்து நடிப்பார்களா என்று ரஹ்மானிடம் கேட்கப்பட்டது.

ஆண்டவன்

ஆண்டவன்

என் மகள் ருஸ்தாவும், துல்கர் சல்மானும் சேர்ந்து நடிப்பார்களா என்று எனக்கு தெரியாது. அந்த ஆண்டவன் விருப்பம் அதுவாக இருந்தால் நடக்கும் என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ரஹ்மான்

ரஹ்மான்

ரஹ்மான் தனது குடும்பத்துடன் பத்திரிகைக்கு போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ருஸ்தா, துல்கர் ஜோடி சேர்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Actor Rahman said that his daughters are willing to enter film industry just like him and Dulquer Salmaan is their favourite.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil