»   »  நடிகர் சங்க பொதுக்குழு... வருவாரா ரஜினிகாந்த்?

நடிகர் சங்க பொதுக்குழு... வருவாரா ரஜினிகாந்த்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் வந்த பிறகு முதல் பொதுக்கு வரும் 20 ம் தேதி கூடுகிறது.

இதுவரை ஐந்து முறை செயற்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Will Rajini attend Nadigar Sangam meet?

நேற்று, நடிகர் சங்க வளாகத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், அறங்காவலர்கள் ஐசரி கணேஷ், குட்டி பத்மினி ஆகியோருடன் சங்க நிர்வாகிகள் அஜய் ரத்தினம், ஸ்ரீமன், விக்னேஷ், பசுபதி, ரோகிணி, லலிதகுமாரி,சங்கீதா, சோனியா மற்றும் பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த பொதுக்குழு முடிவு அறிவிக்கப்பட்டது.

முதல் பொதுக்குழு என்பதால், ரஜினி, கமல், அஜித், விஜய் உட்பட அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட உள்ளது. நாடக நடிகர்கள், முன்னணி நடிகர், நடிகையர் அனைவரும் கலந்து கொள்ள ஏதுவாக அன்றைய தினம் படப்பிடிப்புகளும் ரத்து செய்யும்படி, தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு நடிகர் சங்கம் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பொதுக்குழுவில் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவது பற்றிய முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய பொறுப்பாளர்கள் இன்னும் கணக்குகளை ஒப்படைக்கவில்லை என்பதும் விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவிருக்கிற பொதுக்குழு என்பதால் ரஜினி உட்பட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நடிகர் சங்க தேர்தலில் யார் ஜெயித்து வந்தாலும், முதலில் நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றிவிடுங்கள் என அறிவுறுத்தியிருந்தார் ரஜினி. ஆனால் இதுவரை அதுகுறித்து நடிகர் சங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை. பதிலுக்கு, ரஜினியை விட எனக்கு தமிழுணர்வு அதிகம் என்று கமெண்ட் அடித்திருந்தார் நாசர். இந்த சூழலில் பொதுக்குழுவுக்கு ரஜினி வருவாாரா என்ற கேள்வி முக்கியமாக பார்க்கப்படுகிறது.

English summary
Nadigar Sangam has invited Rajinikanth for its first general body meeting. But sources says that the actor's presence is doubtful.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil