»   »  "இது" மட்டும் நடந்துட்டா.. அது தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத நாள் பாஸ்!

"இது" மட்டும் நடந்துட்டா.. அது தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத நாள் பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

"இது" மட்டும் நடந்துட்டா.. அது தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத நாள் பாஸ்!

சென்னை: நடிகர் சங்க கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக தயாரிக்கப்படும் படத்தில் ரஜினியையும், கமலையும் ஒரு பாடலுக்கு ஆட வைக்க நடிகர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. அதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கென பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

புதிய படம்...

புதிய படம்...

அதில் ஒன்று முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து புதிய படம் பண்ணுவது. இந்தப் படத்தில் நடிகர்கள் கார்த்தி, விஷால், ஆர்யா, ஜீவா உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

வெற்றிப்படமாக்க முயற்சி...

வெற்றிப்படமாக்க முயற்சி...

இந்தப் படத்தின் மூலம் வசூலாகும் பணத்தில் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படு வருகின்றன.

ரஜினியும், கமலும்...

ரஜினியும், கமலும்...

அதன் ஒரு கட்டமாக இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ரஜினியையும், கமலையும் நடிக்க வைக்கலாம் என நடிகர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளார்களாம். எனவே, இது தொடர்பாக அவர்கள் இருவரிடமும் சம்மதம் பெறும் முயற்சிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளதாம்.

செயற்குழுக் கூட்டம்...

செயற்குழுக் கூட்டம்...

இம்மாதம் 17ம் தேதி நடிகர் சங்க செயற்குழுக்கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கால்ஷீட் கிடைக்குமா?

கால்ஷீட் கிடைக்குமா?

ரஜினி, கமல் என இருவருமே தங்களது பட வேலைகளில் பிசியாக உள்ள நிலையில், நடிகர் சங்கத்திற்காக இந்தப் புதிய படத்தில் நடனம் ஆடுவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விஜயகாந்த்...

விஜயகாந்த்...

முன்பு விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சி நடத்தி, நடிகர் சங்கத்திற்கு இருந்த பல கோடி கடனை அவர் அடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The south Indian actors association management is trying to fix Rajini and Kamal for a song in the film that they are taking for fund collection.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil