பீஸ்ட்-க்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமா? டாக்டர் படத்திற்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தந்தது போல!

சென்னை: அஜித் vs விஜய் ரசிகர்கள் சண்டையை விட ரஜினிகாந்த் vs விஜய் ரசிகர்கள் சண்டை சமீபத்தில் பெரும் சர்ச்சையை சமூக வலைதளங்களில் கிளப்பின.

யார் வசூல் மன்னன் என்கிற கேள்வியையும் யார் இப்போதைக்கு டாப் என்ற போட்டா போட்டிகளும் அடிக்கடி ட்விட்டர் சண்டைகளாக வளர்ந்து வந்த நிலையில், விஜய் படத்திற்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவு தரும் சூழல் தற்போது உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர் 169 படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தான் இந்த திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ரசிகர்கள் சண்டை

ரசிகர்கள் சண்டை

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் இடையேயான சண்டை அடிக்கடி நடந்து வருவது வழக்கம் தான். ஆனால், சமீப காலமாக அந்த மோதல் ரஜினி vs விஜய் ரசிகர்கள் சண்டையாக மாறி விட்டது. ரஜினியின் வழியில் வந்தவர் தான் விஜய் என்றும், இப்போதைக்கு விஜய் தான் கிங் என்றும் இரு தரப்பு ரசிகர்களும் சண்டை போட்டு வருகின்றனர்.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

ஆனால், இந்த சண்டையில் திடீரென ஒரு மாற்றத்தை நெட்டிசன்கள் உணர்ந்துள்ளனர். நேற்று வெளியான பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலின் புரமோ வீடியோவை அதிகளவில் ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்யவில்லை என்பது தான் அது. அதற்கு பதிலாக, ரஜினி ரசிகர்கள் அந்த புரமோவை ஆதரித்து போட்ட கமெண்ட்டுகள் விஜய் ரசிகர்களுக்கே மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

நெல்சன் தான் காரணம்

நெல்சன் தான் காரணம்

இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணம் இயக்குநர் நெல்சன் தலைவர் 169 படத்தை இயக்கப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என்கிற தகவல் தான். ஏகப்பட்ட இயக்குநர்களை தனது அடுத்த படத்திற்காக பரிசீலனை செய்து வரும் சூப்பர்ஸ்டார் நெல்சன் படத்தை ஓகே செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ரசிகர்கள் ஆதரவு

விஜய் ரசிகர்கள் ஆதரவு

தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கப் போகிறார் என்பது தெரிந்த உடனே சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை விஜய் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி தீர்த்தனர். டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை கடக்கவும் விஜய் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு இருந்ததாக கூறப்படுகிறது.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள் டாக்டர் படத்திற்கு செய்ததை போலவே ரஜினிகாந்த் ரசிகர்களும் பீஸ்ட் படத்திற்கு தங்களது முழுமையான ஆதரவை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன் உறுதியான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டால் மட்டும் தான் அது நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X