நெஞ்சை பதறவைக்கும் 'இந்த கொடுமை' பற்றி ஒரேயொரு ட்வீட் போடுவீங்களா ரஜினி சார்?
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் குறித்து ரஜினிகாந்த், கமல் ஹாஸன் வாய்ஸ் கொடுக்க வேண்டும்.
பொள்ளாச்சியில் 200 அப்பாவி பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல். அதில் வெறும் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் பற்றி மீடியாக்களில் அவ்வளவாக செய்திகள் வெளியாகவில்லை என்று மக்கள் குமுறுகிறார்கள்.

ரஜினி
உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட ரஜினிகாந்த் இந்த பொள்ளாச்சி பயங்கரம் குறித்து ஒரேயொரு ட்வீட் போட வேண்டும். அவர் ஒரு ட்வீட் போட்டால் பிரச்சனை சரியாகிவிடுமா என்று நீங்கள் நினைக்கலாம்.

கவனம்
பொள்ளாச்சி சம்பவம் குறித்து அவ்வளவாக யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் ரஜினி ஒரேயொரு ட்வீட் போட்டால் உலக மீடியாக்களின் கவனம் பொள்ளாச்சி பக்கம் திரும்பும். தேசிய, சர்வதேச மீடியாக்களால் இந்த கொடூரம் குறித்து அனைவருக்கும் தெரிய வரும். மீடியாக்கள், மக்கள் அழுத்தம் கொடுத்தால் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். ட்வீட்டில் நீங்கள் எதுவும் எழுதாவிட்டாலும் #PollachiSexualAbuse #ArrestPollachiRapists ஆகிய ஹேஷ்டேகுகளை மட்டும் போட்டால் கூட போதும்.

மகள்கள்
நீங்கள் அரசியல் பற்றி பேச வேண்டாம். ஆனால் இரண்டு மகள்களின் தந்தையான நீங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரேயொரு ட்வீட் போட்டால் நன்றாக இருக்கும். செய்வீங்களா ரஜினி சார்?

கமல் ஹாஸன்
பாபநாசம் படத்தில் மகளை காப்பாற்ற ஏதேதோ செய்த உலக நாயகன் கமல் ஹாஸன் பொள்ளாச்சி சம்பவம் பற்றி ட்வீட் செய்வதுடன், குரல் கொடுக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் தலைவர், பிரபலமான நடிகர் என்பதால் அவர் வார்த்தைக்கு வெயிட் உண்டு.


Click it and Unblock the Notifications











