பொங்கல் போட்டி.. அஜித்தின் வலிமை படத்துக்கு மிகப்பெரிய தலைவலியாக அமையுமா ராஜமெளலியின் RRR?

சென்னை: தீபாவளி ரேஸில் இருந்து பின் வாங்கிய தல அஜித் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வலிமை படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா உள்ளிட்ட சில படங்கள் பொங்கல் போட்டியில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இயக்குநர் ராஜமெளலியின் RRR படமும் பொங்கலுக்கு ரிலீசாகப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகுபலி படம் தமிழ், இந்தி படங்களின் வசூலையே காலி செய்த நிலையில், இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் வலிமைக்கு தலைவலியாக மாறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பொங்கல் போட்டி

பொங்கல் போட்டி

வரும் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகை தியேட்டர் ஓனர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் பொங்கலுக்கு வெளியாக போட்டிப் போட்டுக் கொண்டு காத்திருக்கின்றன.

டோலிவுட்டில் மெகா போட்டி

டோலிவுட்டில் மெகா போட்டி

நடிகர் பிரபாஸின் ராதே ஷ்யாம், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா மற்றும் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் என மூன்று பிரம்மாண்ட படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள நிலையில், டோலிவுட்டில் மிகப்பெரிய கிளாஷ் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் பொங்கல் 2022 சினிமா உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கிளாஷ் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமைக்கு தலைவலி

வலிமைக்கு தலைவலி

மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா தெலுங்கில் மட்டும் வெளியாக உள்ள நிலையில், வலிமை படத்துக்கு அந்த படத்தால் பெரிய சிக்கல் ஏதும் வர வாய்ப்பில்லை. ஆனால், பிரபாஸின் ராதே ஷ்யாம் மற்றும் இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படங்கள் பான் இந்தியா படமாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், வலிமை வசூல் பாதிக்கும் சூழல் உருவாகுமா என டிராக்கர்கள் கணித்து வருகின்றனர்.

பாகுபலி வசூல்

பாகுபலி வசூல்

பாலிவுட் படங்களையே புரட்டிப் போட்டு அசுர வசூல் வேட்டை நடத்திய பாகுபலி படத்தை இயக்கிய ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு மற்றும் அந்த படம் பொங்கலுக்கு வெளியானால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரிய பட்ஜெட்

பெரிய பட்ஜெட்

தல அஜித்தின் வலிமை படத்துக்கு கம்பேர் செய்து பார்த்தால் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் வரலாற்று கதையாக உருவாகி உள்ளது. உலகளவில் அந்த படத்திற்கு பிசினஸ் நடைபெற்று வருவதால் வலிமை படத்துக்கு நிச்சயம் மற்ற படங்களை விட RRR மிகப்பெரிய போட்டியை உருவாக்கும் என கூறுகின்றனர்.

வலிமை கதை

வலிமை கதை

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படத்தில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை போலவே கதை மிகவும் வலிமையாக உள்ளதால் நிச்சயம் எந்த படம் வந்தாலும் ஒரு கை பார்த்து விடும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தல தான்

தமிழ்நாட்டில் தல தான்

இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியானாலும் தல அஜித் தான் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் வலிமை படம் நிச்சயம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு கடும் போட்டி கொடுக்கும் என்றும் கோலிவுட்டில் பலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X