உறுதியானதா சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து?... ஜீவனாம்சம் எவ்வளவு தெரியுமா ?
ஐதராபாத் : சமந்தா - நாக சைதன்யாவின் திருமண வாழ்க்கை தொடர்பான செய்திகள் தான் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருகிறது. இவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள், விவாகரத்து பெற போகிறார்கள் என்ற வதந்திகள் தான் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
சமந்தாவும், நாக சைதன்யாவும் பல மாதங்களாக பிரிந்து வாழ்வதாகவும், நாக சைதன்யா தற்போது தனது அப்பா நாகர்ஜுனா வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்பட்டது. விவாகரத்து வதந்தி பற்றி கேட்ட பத்திரிக்கையாளரிடம் சமந்தா கோபப்பட்டார். ஆனால் நாக சைதன்யாவோ, தனிப்பட்ட வாழ்க்கை வேற, நடிப்பு வேறு. ஏன் எப்போதும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்விகளையே கேட்கிறீர்கள். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம் என வருத்தத்துடன் கூறி உள்ளார்.
ஆனால் சமந்தாவோ, நாக சைதன்யாவோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ அல்லது மற்றவர்களோ இவர்களது விவகரத்து வதந்திகள் பொய்யானவை என்றோ, உண்மை தான் என்றோ உறுதியாக கூறவில்லை. இதுவரை வெளியான தகவல்கள் அனைத்து யூகங்களின் அடிப்படையிலேயே கூறப்பட்டு வருகின்றன.

இது தான் விவகாரத்திற்கு காரணமா
அந்த வகையில் லேட்டஸ்டாக இவர்களின் விவாகரத்திற்கு காரணம், திருமணத்திற்கு பிறகு சமந்தா அதிக கிளாமராக நடிப்பதும், கிளாமராக ஃபோட்டோஷுட் நடத்தி வருவதும் தானாம். இவற்றை வேண்டாம் என நாகர்ஜுனா குடும்பத்தினர் கூறியும் சமந்தா கேட்கவில்லையாம். அதோடு, தி ஃபேமிலிமேன் வெப் சீரிஸில் சமந்தா நடித்த கேரக்டர் நாகர்ஜுனா குடும்பத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாம்.

குடும்ப உறுப்பினர்கள் முயற்சி
இந்த இரண்டு காரணங்களால் தான் சமந்தா, நாக சைதன்யா இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். அவர்கள் பிரிந்து வாழ்வதால் தான் அமீர்கானுக்கு, நாக சைதன்யா அளித்த விருந்தில் சமந்தா கலந்து கொள்ளவில்லையாம். பிரிந்து வாழும் இந்த தம்பதியை சேர்த்து வைக்க நாகர்ஜுனா, அமலா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முயற்சி செய்தும், அனைத்தும் தோல்வியில் முடிந்ததாம்.

அடுத்த மாதம் விவாகரத்தா
இதன் அடுத்த கட்ட விவாகரத்து விவகாரம் கோர்ட் வரை சென்று விட்டதாம். சமந்தா - நாகசைதன்யா சேர்ந்து வாழ்வதற்காக கோர்ட்டில் பலமுறை கவுன்சிலிங் கூட நடத்தப்பட்டதாம். இருந்தும் பிரிவதில் சமந்தா -நாக சைதன்யா இருவரும் உறுதியாக உள்ளனராம். இவர்களின் விவாகரத்து அடுத்த மாதம் அல்லது 2 மாதங்களில் முடிவுக்கு வர உள்ளதாம். அதன் பிறகு விவாகரத்து தொடர்பான தகவலை ஓப்பனாக வெளியில் சொல்ல உள்ளார்களாம்.

இவ்வளவு கோடி ஜீவனாம்சமா
விவாகரத்து பெற்ற பிறகு சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக ரூ.50 கோடி வழங்கப்பட உள்ளதாம். இந்த விவாகரத்து தொடர்பான பரபரப்பு அடங்குவதற்காக தான் சில மாதங்கள் பிரேக் எடுக்க உள்ளதாக சமந்தா அறிவித்தாராம். இப்போதும் விவாகரத்து தொடர்பான பிரச்சனைகளை ஓரங்கட்டுவதற்காக தான் மழையில் நனைந்தபடி சைக்கிங் சென்ற வீடியோவை வெளியிட்டும், தான் நடத்தி வரும் Saaki நிறுவனத்தின் முதலாமாண்டு நிறைவு நாளை முன்னிட்டு, ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறாராம்.

கவனமாக பதில் சொன்ன சமந்தா
நேற்று மாலை 5 மணிக்கு சமந்தா தனது கலந்துரையாடலில் விவாகரத்து பற்றி சுவாரஸ்யமாக ஏதாவது சொல்வாரா என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சமந்தா மிக கவனமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி உள்ளார்.


Click it and Unblock the Notifications











