»   »  சந்தானம் படத்துக்கு யு கிடைச்சிடுச்சி... எப்போ ரிலீஸ்?

சந்தானம் படத்துக்கு யு கிடைச்சிடுச்சி... எப்போ ரிலீஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்தானத்தை கடைசியாக திரையில் பார்த்தது தில்லுக்கு துட்டு படத்தில்தான். அதன்பிறகு கிட்டத்தட்ட முகமே மறந்துவிட்ட நிலை.

அவர் நடித்த சர்வர் சுந்தரம் படம் இதோ வரும் அதோ வரும் என்கிறார்கள். எப்போ வரும் என்றே தெரியாத நிலை.

சென்சார்

சென்சார்

இப்போதுதான் ஒரு சின்ன சந்தோஷம் சந்தானத்துக்கு. படத்தை தணிக்கைக் குழு பார்த்துவிட்டு யு சான்று வழங்கியுள்ளது.

சரி... அடுத்து என்ன, சட்டுபுட்டென ரிலீஸ் தேதியை அறிவித்து ஜோராக வெளியிட வேண்டியதுதானே? என்கிறீர்களா?

சிக்கல்

சிக்கல்

அங்குதான் சிக்கல். படத்தை வெளியிடும் நிறுவனம் ஏகப்பட்ட கடனில் சிக்கித் தவிக்கிறதாம். அதையெல்லாம் செட்டில் பண்ணால்தான் இந்த சுந்தரத்தை தியேட்டர்களில் சர்வ் பண்ணமுடியுமாம்.

மற்ற படங்கள்

மற்ற படங்கள்

இதற்குள் சந்தானம் நடித்த மற்ற படங்களான மன்னவன் வந்தானடி, சக்க போடு போடு ராஜா, ஓடி ஓடி உழைக்கனும் போன்றவற்றின் படப்பிடிப்பே முடிந்துவிடும் என முணுமுணுக்கிறார்கள்.

வெளியில் வருமா?

வெளியில் வருமா?

வாரா வாரம் வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு படத்தில் வந்தோமோ, ரசிகர்களின் அப்ளாசை அள்ளினோமா என்றில்லாமல் இப்போது விளக்கில் அடைக்கப்பட்ட சிரிப்பு பூதமாகிவிட்டாரே சந்தானம்... யார் வந்து அந்த விளக்கைத் தேய்த்து சந்தானத்தை வெளியே கொண்டு வரப் போகிறார்களோ!

English summary
Santhanam's Server Sundaram has been censored and got clean U. But producers still in trouble in announcing release date

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil