»   »  இன்றைய ரிலீஸ் வெற்றிவேல்... சசிகுமாருக்கு வெற்றி கிடைக்குமா?

இன்றைய ரிலீஸ் வெற்றிவேல்... சசிகுமாருக்கு வெற்றி கிடைக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சசிகுமார் நடித்த வெற்றிவேல் படம் இன்று உலகெங்கும் வெளியாகிறது.

இந்தப் படம் சசிகுமாருக்கு இன்னொரு சுந்தரபாண்டியனாக அமையும் என கோலிவுட்டில் பேசப்படுவதால், ஒரு எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.


தாரை தப்பட்டையில் சசிகுமார் நடித்துக் கொண்டிருந்த போதே ஆரம்பிக்கப்பட்ட படம்தான் வெற்றிவேல். சசிகுமாருக்கு ஜோடியாக இதில் நடித்திருப்பவர் மியா ஜார்ஜ்.


நகைச்சுவை - காதல்

நகைச்சுவை - காதல்

சசிகுமாருக்கு இயல்பாகக் கைவரும் நகைச்சுவை - காதல் அம்சங்கள் கலந்த திரைக்கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளதாக இயக்குநர் வசந்தமணி தெரிவித்துள்ளார்.


லைகா நிறுவனம்

லைகா நிறுவனம்

தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் பெற்றுள்ள வெற்றிவேல் படத்தை லைகா நிறுவனம் தமிழகமெங்கும் விநியோகிக்கிறது.


சசிகுமாருக்கு முக்கிய படம்

சசிகுமாருக்கு முக்கிய படம்

சுப்பிரமணியபுரத்தில் தொடங்கி அடுத்தடுத்து நடிகராக, தயாரிப்பாளராக, இயக்குநராக வெற்றிகளை ருசித்த சசிகுமாருக்கு, சுந்தர பாண்டியனுக்குப் பிறகு சரியான படங்கள் அமையவில்லை. பிரம்மன் எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தாரை தப்பட்டையும் பெரிதாகப் போகவில்லை.


கோலிவுட் பேச்சு

கோலிவுட் பேச்சு

ஆனால் வெற்றிவேல் படம் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள், படம் சுந்தர பாண்டியன் ரேஞ்சுக்கு வந்திருப்பதாகவும், சசிகுமாருக்கு இது வெற்றிப் படமாக அமையும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.


English summary
Sasikumar's Vasanthamani directed Vetrivel releasing today worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil