»   »  சிபிராஜுக்கு கை கொடுக்குமா 'சத்யா'?

சிபிராஜுக்கு கை கொடுக்குமா 'சத்யா'?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிபிராஜுக்கு கை கொடுக்குமா 'சத்யா'?- வீடியோ

பதிநான்கு வருட சினிமா வாழ்க்கையில் இதுவரை ஒரு சில படங்கள் மட்டுமே சுமாருக்கு சற்று மேலாக அமைந்திருக்க, சூப்பர் ஹிட் என்று கூறும் அளவிற்கு சிபி ராஜூக்கு எந்தப் படமுமே அமையவில்லை. ஆக்சன், காமெடி, ஹாரர் என அனைத்து வகைப் படங்களுமே முயற்சித்திருக்கிறார். ஹீரோ, வில்லன், சைடு ரோல் என அனைத்து கதாப்பாத்திரங்களையும் முயற்சித்திருக்கிறார். ஆனால் இன்று வரை ஒரு முறையான பிடிமானம் எதிலுமே அமையவில்லை.

இந்த நிலையில் சிபிராஜின் அடுத்த தெரிவு சஸ்பென்ஸ் த்ரில்லர். தெலுங்கில் புதுமுகங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றி பெற்ற க்‌ஷணம் என்ற திரைப்படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்று, தாயாரித்து நடித்து சத்யா என்ற பெயரில் வெளியிடவிருக்கிறார். இந்தத் திரைப்படமாவது சிபிராஜூக்கு கைகொடுக்குமா? பார்ப்போம்.

Will Sathya help to boost Sibiraj career?

அமெரிக்காவில் பணிபுரியும் கதாநாயகன் திடீரென தனது முந்நாள் காதலியிடமிருந்து அழைப்பு வர, அவளைப் பார்க்க இந்தியா விரைகிறான். அவளைச் சந்திக்கும்போது, அவளுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதும், அது காணாமல் போயிருப்பதும் தெரியவருகிறது. தனது குழந்தையை கண்டுபிடிக்க நாயகனிடம் உதவி கேட்கிறாள்.

அதன்பிறகு குழந்தையைத் தேடும் பணியில் நாயகன் ஈடுபட, கதையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகின்றன. நாயகியின் கணவன் உட்பட பல்வேறு நபர்களைச் சந்தித்து விசாரிக்கிறான். இப்படி போய்க்கொண்டிருக்கும் போதே இடைவேளையில் சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம்.

குழந்தையைச் தேடும் பணியில் ஒரு பெண் அசிஸ்டண்ட் கமிஷ்னரும் உதவி செய்கிறாள். அனைவரது உதவியோடும் தன் முன்னாள் காதலியின் குழந்தையை நாயகன் கண்டறிந்தாரா என்பது தான் சத்யா திரைப்படத்தின் கதை.

படம் ஆரம்பத்தில் சற்று மெதுவாகவே சென்றாலும், குழந்தையைத் தேட ஆரம்பித்ததும் மிகவும் சுவாரஸ்யமாக நகர ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் இருக்கும் ஒரு சில குழப்பங்களையும், முடிச்சுகளையும் ஒவ்வொன்றாக அவிழ்க்கும்போது இருக்கும் சுவாரஸ்யம் ஒருபுறம் இருக்க, இந்தியாவில் உள்ள யாரிடமும் உதவி கேட்காமல் ஏன் அமெரிக்காவில் இருக்கும் தனது காதலரிடம் குழந்தையைக் கண்டுபிடிக்க உதவி கேட்டார் என்கிற காரணத்தை அறியும் போது இன்னும் மனம் நெகிழ ஆரம்பித்துவிடும்.

முற்றிலும் புதுமுகங்களை வைத்து, ஸ்க்ரிப்டை மட்டும் நம்பி உருவாக்கப்பட்ட இப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் புதுமுகங்களல்லாமல் வரலட்சுமி, ரம்யா நம்பீசன், சதீஷ், ஆனந்தராஜ் என முன்ணனி நட்சத்திரங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த சத்யா. சிபியின் காதலியாக ரம்யாவும், சிபிக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக வரலட்சுமியும் நடித்திருக்கின்றனர்,

சிபிராஜூக்கு நிச்சயம் இப்படம் வெற்றிப்படமாக அமைய வாய்ப்பிருக்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் விரும்பிகளுக்குப் பிடிக்கும்.

-முத்து

English summary
A preview on Sibiraj's upcoming thriller Sathya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil