»   »  ஜல்லிக்கட்டுக்கு வழி பிறக்கலேன்னா... ஓபிஎஸ்ஸை முற்றுகையிடுவோம்!- இயக்குநர் கவுதமன்

ஜல்லிக்கட்டுக்கு வழி பிறக்கலேன்னா... ஓபிஎஸ்ஸை முற்றுகையிடுவோம்!- இயக்குநர் கவுதமன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமரைச் சந்தித்த பிறகும் ஜல்லிக்கட்டு நடக்க வழி பிறக்காவிட்டால் சென்னை திரும்பும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிடுவோம் என்று இயக்குநர் கவுதமன் கூறினார்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் களத்தில் குதித்துள்ளதால், பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தின் போது இயக்குநர் கவுதமன் மற்றும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, அவர்களை கைது செய்தனர்.

Will siege OPS, says director Gouthaman

இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் விடுவித்தனர்.

இந்த நிலையில், சென்னை மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் இயக்குநர் கவுதமன் பங்கேற்றுள்ளார். போராட்டக்காரர்கள் மத்தியில் இன்று பேசிய அவர், "ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றக் கோரி பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். பிரதமரை சந்தித்த பிறகும் ஜல்லிக்கட்டு நடத்த வழி பிறக்காவிட்டால் சென்னை திரும்பும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிடுவோம்," என்றார்.

English summary
Director Va Gouthaman says whether no permission for Jallikkattu even after the meet with PM Modi, the protestors would siege CM O Panneer Selvam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil