»   »  இங்கிட்டு தமிழ் ராக்கர்ஸ், அங்கிட்டு ஓ.பி.எஸ்.: சூர்யா படம் தள்ளிப் போகிறதா?

இங்கிட்டு தமிழ் ராக்கர்ஸ், அங்கிட்டு ஓ.பி.எஸ்.: சூர்யா படம் தள்ளிப் போகிறதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலால் சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படம் ஏற்கனவே பலமுறை தள்ளிப் போய் நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுகிறது.


இந்த காரணத்தால் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


சிங்கம்

சிங்கம்

முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் சிங்கம் 3 படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகாது. ஒரு பட ரிலீஸை திடீர் என்று தள்ளி வைக்க முடியாது என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் பிரபல இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.


மக்கள்

மக்கள்

திடீர் என்று தைரியமாக பேசியுள்ள ஓ. பன்னீர்செல்வத்திற்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள். அவர் அளிக்கும் பேட்டிகளை காணவே டிவி முன்பு அமர்ந்துள்ளனர். இதனால் தற்போது தியேட்டர்களில் ஓடும் படங்களின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது.


மீம்ஸ்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இடையே நடக்கும் இந்த பிரச்சனையில் சூர்யா சிக்கிவிட்டாரே என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போடுகிறார்கள்.
தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

நாளை சிங்கம் 3 ரிலீஸான கையோடு காலை 11 மணிக்கே அதை இணையதளத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வேறு சவால் விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
The question that everybody is asking at the moment is whether Suriya starrer Si3 get postponed because of the current political situation in Tamil Nadu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil