»   »  எதிரும், புதிருமான சிவா, தனுஷ் இன்று சந்திப்பார்களா?: பரபரக்கும் ஆந்திரா மீடியா

எதிரும், புதிருமான சிவா, தனுஷ் இன்று சந்திப்பார்களா?: பரபரக்கும் ஆந்திரா மீடியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத் ஹோட்டலில் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த தனுஷும், சிவகார்த்திகேயனும் சந்தித்து பேசிக் கொள்வார்களா என எதிர்பார்த்து மீடியாக்கள் கேமராவுடன் தயாராக உள்ளன.

தனுஷ் சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டு அழகு பார்த்தார். பின்னர் இருவருக்கும் இடையே பிரச்சனை வந்து பிரிந்துவிட்டனர். வளர்த்துவிட்ட ஏணியை மறக்கவில்லை. அந்த ஏணி மீதான மரியாதை தற்போதும் அப்படியே உள்ளது என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மரியாதை இருப்பதால் தான் ஏணி பற்றி யாரிடமும் எதுவும் தவறாக பேசவில்லை என்று சிவா கூறியுள்ளார்.

சிவா, தனுஷ்

சிவா, தனுஷ்

பிரிவுக்கு பிறகு சிவகாரத்திகேயனும், தனுஷும் சந்தித்து பேசுவதை தவிர்த்து வருகிறார்கள். இந்நிலையில் தான் அவர்கள் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு இன்று ஏற்படுகிறது.

ரெமோ

ரெமோ

ரெமோ படத்தின் தெலுங்கு பதிப்பின் பிரஸ் மீட் ஹைதராபாத்தில் உள்ள தஸ்பல்லா ஹோட்டலில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த பிரஸ் மீட்டிற்கு தயாரிப்பாளர் தில் ராஜு ஏற்பாடு செய்துள்ளார்.

கொடி

கொடி

தனுஷ், த்ரிஷா நடித்துள்ள கொடி படத்தின் தெலுங்கு பதிப்பான தர்ம யோகியின் இசை வெளியீட்டு விழா ரெமோ நிகழ்ச்சி நடக்கும் அதே ஹோட்டலில் அதே 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிவகார்த்திகேயன் இன்று நாடு திரும்பி ரெமோ நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரும், தனுஷும் சந்தித்துக் கொள்வார்களா என்பதை ஆந்திரா மீடியாக்கள் மிகவும் எதிர்பார்த்து கேமராக்களுடன் காத்திருக்கின்றன.

English summary
Remo telugu version's press meet and Kodi's telugu version's audio launch are happening today in Daspalla hotel in Hyderadabad. Will Dhanush and Sivakarthikeyan meet?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil