Don't Miss!
- Finance
சீனாவின் மெகா திட்டம்.. மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
- Automobiles
ஒரு சில ஊர்ல கன்னாபின்னானு ஓட்றாங்க... எந்த நகரில் நல்ல கார் டிரைவர்கள் அதிகம் இருக்கறாங்க தெரியுமா?
- News
பேரறிவாளன் விடுதலை தாமதமானாலும் மகிழ்ச்சி! உடல் நலம் பேண வேண்டும்! அன்புடன் அன்புமணி போட்ட கண்டிஷன்!
- Sports
மீண்டும் ஏதேனும் பிரச்சினையா? குர்னல் பாண்டியாவை வெளியே அனுப்பிய கம்பீர்.. 3 மாற்றம் தேவையா?
- Technology
விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!
- Lifestyle
வெங்காய சட்னி
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக் பாஸ் தமிழ் 5 கிராண்ட் ஃபினாலே.. சிறப்பு விருந்தினர் யாரு தெரியுமா? பரபரக்கும் தகவல்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் 5 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெறவிருக்கிறது.
கடந்த சீசனில் முன்னாள் போட்டியாளர்களே சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட நிலையில், இந்த சீசன் கிராண்ட் ஃபினாலேவுக்கு சினிமா பிரபலங்கள் பங்கேற்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பினர்.
இந்நிலையில், தமிழ் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவிலும் சூப்பரான சிறப்பு விருந்தினரை களமிறக்க விஜய் டிவி ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலா படத்துக்கு பிறகு இந்தப் படத்துலதான் உடைந்து அழுதேன்... விஷால் நெகிழ்ச்சி

முன்னாள் போட்டியாளர்கள் மட்டுமே
கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் எந்தவொரு நடிகரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான கவின், ஷெரின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த சீசனிலும் முன்னாள் போட்டியாளர்கள் தான் சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

தெறிக்கவிட்ட தெலுங்கு பிக் பாஸ்
சமீபத்தில் நிறைவடைந்த தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராஜமெளலி, ஆலியா பட், ரன்பீர் கபூர், நானி, ராஷ்மிகா மந்தனா, நாக சைதன்யா, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, தேவிஸ்ரீ பிரசாத் என ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகை ஸ்ரேயா எல்லாம் ஸ்பெஷல் டான்ஸ் ஆடி அரங்கை அதிர வைத்தார்.

தமிழிலும் எதிர்பார்ப்பு
தெலுங்கு பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவை பார்த்த ரசிகர்கள் தமிழ் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியும் இதே அளவுக்கு இருக்குமா? இந்த முறை ஒரு சினிமா நடிகராவது பங்கேற்பாரா? என ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இவங்களாம் இல்லை
நமீதா மாரிமுத்து, அபிஷேக் ராஜா, இமான் அண்ணாச்சி, மதுமிதா உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் கொரோனா பரவல் காரணமாக பல பேர் பங்கேற்க முடியாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆரிக்கு அழைப்பு இல்லை
கடந்த சீசன் பிக் பாஸ் டைட்டில் வின்னரான ஆரி அர்ஜுனன் இந்த கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பங்கேற்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், தனக்கு விஜய் டிவி அழைப்பே விடுக்கவில்லை என பகிரங்கமாக ஒரு ட்வீட்டை போட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

பாலாஜி முருகதாஸ் வருகிறார்
கொரோனா காரணமாக இந்த முறை அதிக நபர்களை அழைக்க முடியவில்லை என பாலாஜி முருகதாஸ் ட்வீட் போட்டு விஜய் டிவி சார்பாக ஆரியின் ட்வீட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும், தான் பங்கேற்கிறேன் என்பதையும் எமோஜி போட்டு உறுதி செய்துள்ளார் பாலாஜி முருகதாஸ். பாவனியை பிக்பாஸ் வீட்டில் இருந்து பாலா வெளியே அழைத்து வருவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் கம்மிங்
விஜய் டிவியின் நம்ம வீட்டுப் பிள்ளையான சிவகார்த்திகேயன் பிக் பாஸ் தமிழ் 5 கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொள்ள போகிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. டாக்டர், டான் என மெர்சல் காட்டி வரும் கோலிவுட்டின் புதிய 100 கோடி கிளப் ஹீரோ பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கு வருவது செம ஸ்பெஷல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.