கன்ஃபார்ம் ஆன தலைவர் 169 டீம்...ரஜினிக்கும் பாட்டெழுதுவாரா சிவகார்த்திகேயன் ?

சென்னை : தலைவர் 169 படம் பற்றிய மாஸான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. டைரக்டர், இசையமைப்பாளர் யார் என்பது கன்ஃபார்ம் ஆகி விட்டதால், இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் பாட்டெழுதுவாரா என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.

ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை யார் இயக்க போகிறார் என்பது கோலிவுட்டில் நீண்ட நாட்களாகவே பேச்சு அடிபட்டு வந்தது. சிறுத்தை சிவா, தேசிங்கு பெரியசாமி, வெற்றிமாறன் என பல டைரக்டர்களின் பெயர்கள் இதற்காக அடிபட்டது. இதற்கிடையில் தலைவர் 169 படத்தை இளையராஜா தயாரிக்க உள்ளதாகவும், பாலிவுட் டைரக்டர் ஒருவர் இயக்க உள்ளதாக கூட தகவல்கள் வெளியானது.

கன்ஃபார்ம் ஆன தலைவர் 169

கன்ஃபார்ம் ஆன தலைவர் 169

இந்நிலையில் தலைவர் 169 படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்க போவதாகவும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க போவதாகவும் இன்று மாலை ஸ்பெஷல் வீடியோ ஒன்றின் மூலம் அறிவிப்பு வெளியிட்டது சன் பிக்சர்ஸ். ரஜினியின் எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக ரஜினி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

 ரஜினியை இயக்கும் நெல்சன்

ரஜினியை இயக்கும் நெல்சன்

இதே போல் ரஜினியின் பேட்ட, தர்பார் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்திற்கு இசையமைக்க போகிறார் அனிருத். தலைவர் 169 படத்தை பொறுத்த வரை ரஜினி - நெல்சன் திலீப்குமார் காம்போ தான் புதிது. நெல்சன் - அனிருத், அனிருத் - ரஜினி காம்போ இணைந்து ஏற்கனவே பல ஹிட்களை கொடுத்து, ரசிகர்களிடம் புகழ்பெற்றது தான்.

100 கோடி வசூல் படம்

100 கோடி வசூல் படம்

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இந்த படம் ஓரளவிற்கு பேசப்பட்டதால், இரண்டாவதாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். கொரோனா பெருந்தொற்று காலத்திலும், ரிலீஸ் செய்யப்பட்டு 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. 2021ம் ஆண்டில் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு 100 கோடி வசூலித்த படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் தான்.

நெல்சன்–அனிருத்–சிவகார்த்திகேயன் காம்போ

நெல்சன்–அனிருத்–சிவகார்த்திகேயன் காம்போ

டாக்டர் படத்தை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று விட்டார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நெல்சன் இதுவரை இயக்கிய மூன்று படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார். இந்த படங்கள் அனைத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடலாவது எழுதி உள்ளார். நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு பாடலை எழுதி தான் பாடலாசிரியராக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். இந்த பாடல் செம ரீச் ஆனது.

ரஜினிக்கு பாட்டெழுதுவாரா சிவகார்த்திகேயன்

ரஜினிக்கு பாட்டெழுதுவாரா சிவகார்த்திகேயன்

அதே போல் டாக்டர் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான செல்லம்மா பாடலை எழுதியதும் சிவகார்த்திகேயன் தான். தற்போது பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட உள்ள அரபிக் குத்து பாடலை எழுதி இருப்பதும் சிவகார்த்திகேயன் தான். நெல்சன்-அனிருத்-சிவகார்த்திகேயன் காம்போவில் உருவான பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆகி உள்ளன. இதனால் தலைவர் 169 படத்திலும் சிவகார்த்திகேயன் நிச்சயம் ஒரு பாடல் எழுத வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன செய்ய போகிறார் சிவகார்த்திகேயன்

என்ன செய்ய போகிறார் சிவகார்த்திகேயன்

மற்ற நடிகர்கள் படம் எனும் போது ஓகே. ஆனால் இது சூப்பர்ஸ்டார் படம். ரஜினி படத்தில் இணைய வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவும் கூட. அதனால் தலைவர் 169 படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் மட்டும் எழுதுவாரா அல்லது ஏதாவது சீனில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுமா என்பதை தெரிந்து கொள்ள ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இதுவரை ஜாலியாக, யூத்ஃபுல்லான வார்த்தைகளால் பாட்டெழுதும் சிவகார்த்திகேயன், ரஜினிக்கு எப்படி பாட்டெழுதுவார் என தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X