ரொம்ப லென்தா போகுதே...சன் பிக்சர்ஸ் அண்ணே...கொஞ்சம் பீஸ்ட் பிரச்சனைய சீக்கிரம் முடிச்சு விடுங்க
சென்னை : பீஸ்ட் படம் ரிலீசானதில் இருந்தே சோஷியல் மீடியா, சினிமா நிகழ்ச்சி, பிரபலங்கள் என எங்கு திரும்பினாலும் அந்த படம் பற்றிய பேச்சாக தான் உள்ளது. படம் பற்றிய விமர்சனங்கள் ஒரு புறம் நான் ஸ்டாப்பாக போய் கொண்டிருக்கிறது என்றால், மறுபுறம் படத்தின் வசூல் பற்றிய பலரும் பலவிதங்களில் கூறி வருகிறார்கள்.
Recommended Video
பீஸ்ட் படம் ரிலீசான நான்கு நாட்களில் 200 கோடி வசூலை கடந்து விட்டதாகவும், முதல் வாரத்திலேயே அண்ணாத்த, வலிமை, எதற்கும் துணிந்தவன் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து வசூலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். அதே சமயம், அதெல்லாம் கிடையாது. தற்போது வரை வலிமை தான் நம்பர் ஒன் என்று மற்றொரு தகவலும் கூறப்படுகிறது.

வசூலில் யார் நம்பர் ஒன்
2022 ம் ஆண்டில் ரிலீசான படங்களில் அஜித்தின் வலிமை படம் தான் தற்போது வசூலில் முதலிடத்தில் உள்ளதாகவும். அதே சமயம் பீஸ்ட் படமும் நல்ல வசூலை பெற்று வருவதாகவும், ஆனால் எதிர்பார்த்த வசூல் இல்லாததால் வலிமை படத்தின் வசூல் சாதனையை இதுவரை முறியடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பிப்ரவரி 24 ம் தேதி ரிலீசான வலிமை படம் தற்போது வரை 250 கோடிகளை வசூல் செய்துள்ளது. சமீபத்தில் தான் இந்த படம் 50வது நாளை நிறைவு செய்தது.

சன் பிக்சர்ஸ் வெளியிடுமா
வசூலில் முதலிடம் வலிமைக்கா, பீஸ்டுக்கா என்ற குழப்பம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் பீஸ்ட் படத்திற்காவது வசூல் நிலவரத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுமா என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பீஸ்ட் வசூல் என்ன என்பதை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது மட்டும் தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டும் என கூறப்படுகிறது.

அண்ணாத்தக்கு கூட வெளியிடலியே
வலிமை படம் 200 கோடி கிளப்பில் இணைந்ததையும், இதுவரை வசூலான மொத்த தொகை பற்றியும் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். ஆனால் சன் பிக்சர்ஸ் இதுவரை அப்படி ஏன் வெளியிடவில்லை என அனைவரும் கேட்டு வருகின்றனர். ரஜினியின் அண்ணாத்த படமும் பிளாக் பஸ்டர் என்றார்கள். ஆனால் எவ்வளவு வசூல் ஆனது என சொல்லவில்லை. இதே போல் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்றார்கள். ஆனால் வசூல் விபரம் வெளியிடப்படவில்லை.

எஸ்ஏசி.,யே இப்படி சொல்லிட்டாரே
எதற்கும் துணிந்தவன் ரிலீசான போதே படத்தின் வசூல் பற்றி பலரும் கேட்டனர். ஆனால் சன் பிக்சர்ஸ் இதுவரை எதுவும் சொல்லவில்லை. சூர்யா படத்தின் வசூல் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் எதற்கும் துணிந்தவனுக்கு கேட்டனர். ஆனால் பீஸ்ட் படம் அப்படியில்லை. வலிமை, கேஜிஎஃப் 2, அண்ணாத்த என பல படங்களின் வசூலுடன் ஒப்பிடப்பட்டு வருகிறது. படம் பற்றி பலரும் நெகடிவ் கமெண்ட் கொடுத்துள்ளனர். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரே, பீஸ்ட் திருப்பதியளிக்கவில்லை. சரியில்லாமல் போனது என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

பிரச்சனையை முடிங்க பாஸ்
இதனால் பீஸ்ட் வசூல் விபரத்தை வெளியிட்டே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தான் மனது வைத்து இந்த பிரச்சனையை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் இது பெரிய விவாதமாக இன்னும் சில நாட்கள் போய் கொண்டே இருக்கும் என்பது மட்டும் உண்மை.


Click it and Unblock the Notifications











