சூர்யாவுக்கு இப்படி ஒரு வித்தியாசமான ஆசையா...கைதி 2 ல் நிறைவேறுமா ?

சென்னை : தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவராகவும், டாப் ஹீரோக்களில் ஒருவராகவும் இருப்பவர் சூர்யா. அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனால் இவரின் ஒவ்வொரு படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Recommended Video

Suriya எனக்கு பிடிக்கும்: Kamal Speech in Bangalore Vikram Movie Promotion | #Celebrity

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யாவின் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது டைரக்டர் பாலா இயக்கும் சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தில் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த படம் பாதியில் கை விடப்பட்டது. பாலா - சூர்யா இடையே மோதல், சூர்யா 41 டைரக்டர் மாற்றப்பட்டார் என பல விதமாக தகவல்கள் பரவின.

விரைவில் சூர்யா 41

விரைவில் சூர்யா 41

ஆனால் விரைவில் சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும், கோவாவில் அடுத்த கட்ட ஷுட்டிங் ஜுன் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாகவும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கமலின் விக்ரம் படம், மாதவனின் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க போகிறார் என கூறப்பட்டது.

விக்ரமில் சூர்யாவின் ரோல்

விக்ரமில் சூர்யாவின் ரோல்

வாடிவாசல் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராமல் விக்ரம் படத்தில் மிகவும் பவர்ஃபுல் ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் செம டிரெண்டானது. இந்த தகவல் வெளியானதில் இருந்தே விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் பற்றி தான் பேச்சாக இருந்து வருகிறது. அதே போல் விக்ரம் படம் நேற்று ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எதிர்பார்ப்பை கிளப்புறீங்களே

எதிர்பார்ப்பை கிளப்புறீங்களே

விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோல் தான் விக்ரம் 3 படத்தின் கதைக்கான ஆரம்பம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் விக்ரம் 3 படத்தின் ஹீரோவாக சூர்யாவை தான் கமல் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா பற்றிய பல தகவல்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதால் அந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக சூர்யா நடிப்பதாக ஒரு தகவலும் பரவி வருகிறது.

என்ன இப்படி ஒரு ஆசை

என்ன இப்படி ஒரு ஆசை

இந்த சமயத்தில் சூர்யா பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஒரு படத்திலாவது வித்தியாசமான வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதிலும் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படத்தில், அவர் நெற்றியில் திருநீர் பட்டை போட்டு நடிக்க, நான் வில்லனாக நடிக்க வேண்டும் என தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X