ரசிகர்களை சுற்றலில் விட்ட சுழல்...அவிழ்க்கப்படாத மர்மங்கள்... பார்ட் 2 வருமா?

சென்னை : தமிழில் எடுத்து வெளியிடப்பட்டுள்ள முதல் த்ரில்லர் வெப் சீரிஸ் சுழல். மொத்தம் 8 எபிசோட்களைக் கொண்ட இந்த சீரிஸ் கடந்த மாதம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.

Recommended Video

Suzhal Web Series Review | Yessa ? Bussa ? | Aishwarya Rajesh | Kathir |R. Parthiban | *Review

விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி உருவாக்கிய க்ரைம் த்ரில்லர் கதை. பிரம்மா, அருசரண் முருகையன் இணைந்து இயக்கி உள்ளனர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

குற்றவாளி யார், கதை எதை நோக்கி நகர்கிறது, எபிசோடிற்கு எபிசோட் ரசிகர்களின் எண்ண போக்கை மாற்றி, கடைசி வரை த்ரில்லிங் குறையாமல் கொண்டு செல்லப்பட்ட இந்த வெப் சீரிஸிற்கு பெரும்பாலானவர்கள் 5 க்கு 4 ரேட்டிங் கொடுத்திருந்தனர். IMDb 10 க்கு 8.4 என ரேட்டிங் கொடுத்துள்ளது. அந்த அளவிற்கு அனைவரையும் இந்த சீரிஸ் கவர்ந்திருந்தது.

சுழல் சீரிஸ் கதை

சுழல் சீரிஸ் கதை

மலை கிராமத்தில் உள்ள சிமெண்ட் பேக்டரியில் நடக்கும் தீ விபத்து. அதே சமயத்தில் ஒரு இளம் பெண் மர்மமான முறையில் காணாமல் போகிறார். அவரை கண்டுபிடிக்கப் போனால் எஸ்ஐ., மகனுக்கும் அந்த பெண்ணிற்கும் காதல் இருப்பது தெரிய வருகிறது. அவர்களை தேடும் சமயத்தில், இருவரும் குவாரியில் பிணமாக கண்டெடுக்கப்படுகிறார்கள்.பிறகு அது கொலை என தெரிகிறது. கொலையாளி யார், எதற்காக கொலை நடந்தது என்பதை கண்டுபிடிப்பது தான் சீரிசின் மொத்த கதை.

பார்ட் 2 வருமா

பார்ட் 2 வருமா

கொலையாளி யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, கதை முடிந்ததாக காட்டப்பட்டாலும் இந்த கதையில் நன்கு கவனித்தால் அவிழ்க்கப்படாத பல மர்மங்களை டைரக்டர் கதையின் பல இடங்களில் வைத்திருப்பது புரியும். சுழலின் முதல் பாகம் தான் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் இரண்டாம் பாகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கதையில் அப்படி என்ன மர்மங்கள் விலகாமல் உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.

யார் அந்த அம்மணி

யார் அந்த அம்மணி

கதையின் ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வரும் ஒரு கேரக்டர் அம்மணி. சிமெண்ட் பேக்டரி துவங்கப்பட்ட அன்று காணாமல் போன பெண். அந்த பெண்ணிற்கு என்ன ஆனது, அவருக்கும் பேக்டரிக்கும் என்ன தொடர்பு உள்ளது. அந்த பெண் காணாமல் போன பிறகு மயான கொள்ளை விமர்சையாக கொண்டாடப்படுவது ஏன். அந்த பெண் காணாமல் போனதற்கும் மயான கொள்ளைக்கும் கூட தொடர்பு இருக்கா.

அம்மணி பற்றி நிலா காட்டிய ஆர்வம்

அம்மணி பற்றி நிலா காட்டிய ஆர்வம்

அம்மணி யார் என்பதை தெரிந்து கொள்ள நிலா அதிக ஆர்வம் காட்டியதாகவும், அம்மணி பற்றி யார் பேசினாலும் மணிக்கணக்கில் கேட்டுக் கொண்டிருப்பாள் என நிலாவின் ஃபிரண்ட் மலர் கூறுவாள். அம்மணி பற்றி தெரிந்து கொள்ள நிலா எதற்காக ஆர்வம் காட்டினாள். அவளுடன் சேர்ந்து அவரது நண்பர்களும் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்.

த்ரிலோக்கின் மர்ம பெயர்

த்ரிலோக்கின் மர்ம பெயர்

த்ரிலோக்கிற்கும் நிலாவின் மரணத்திற்கும் தொடர்பில்லை என சொல்கிறார்கள். ஆனால் த்ரிலோக் எதற்காக டாக்டர் டெவில் என்ற மர்ம பெயரில் பேஸ்புக்கில் நிலாவை பின்தொடர வேண்டும். நிலா மொபைலில் எடுத்த போட்டோக்கள் த்ரிலோகிற்கு எவ்வாறு கிடைத்தது. டாக்டர் டெவில் என்ற பெயரில் மர்மமான பேஸ்புக் அக்கவுண்ட்டை த்ரிலோக் எதற்காக உருவாக்க வேண்டும்.

த்ரிலோக்கிற்கு தெரியாமல் போனது ஏன்

த்ரிலோக்கிற்கு தெரியாமல் போனது ஏன்

சிமெண்ட் ஃபேக்டரி இன்சுரன்ஸ் பணத்திற்காக தான் எரிக்கப்பட்டதாக கூறுவார்கள். இதற்கு சண்முகம் மற்றும் எஸ்ஐ ரெஜினாவும் உடந்தை என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் ஃபேக்டரியின் எம்டி.,யான த்ரிலோக்கிடம் இருந்து மறைக்கப்பட்டது ஏன். இப்படி யோசிக்க யோசிக்க பல சந்தேகங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X