பிக் பாஸ் சீசன் 6: அந்த எக்ஸ் போட்டியாளரின் கணவர் கலந்துக்க போறாரா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் 2ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

5 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே மீண்டும் 6வது சீசனை தொகுத்து வழங்குவார் என்றும் உறுதியான தகவல்கள் உலா வருகின்றன.

போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் கசிய ஆரம்பித்து வரும் நிலையில், ஒரு முன்னாள் போட்டியாளரின் பார்ட்னர் பங்கேற்க போவதாக அதிரடி தகவல் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

மீண்டும் கமல்

மீண்டும் கமல்

பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் இருந்து 5 சீசன் வரை அந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினார். கடந்த சீசனில் திடீரென அவருக்கு கொரோனா பரவ, ஒரு வாரம் மட்டும் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க, விக்ரம் படத்தின் பணிகளுக்காக செல்வதாக அறிவித்து விட்டு கிளம்பினார். அவருக்கு பதில் சிம்பு புதிய ஹோஸ்ட்டாக பங்கேற்ற நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 6ல் மீண்டும் கமல்ஹாசன் தொகுப்பாளராக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீநிதி

சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீநிதி

சிம்புவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக போராட்டங்களை செய்து சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீநிதியை பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக கொண்டு வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே அப்படியொரு சர்ச்சையை ஸ்ரீநிதி கிளப்பினாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

அஸ்வின் பெயரும் அடிபடுது

அஸ்வின் பெயரும் அடிபடுது

குக் வித் கோமாளி புகழ், அஸ்வின், கனி என மறுபடியும் குக் வித் கோமாளி பிரபலங்களின் பெயர்கள் இந்த சீசனிலும் அடிபட்டு வருகிறது. ஹீரோவான நிலையில், அஸ்வினுக்கு படங்கள் எடுபடாத நிலையில், மீண்டும் ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொண்டு பிக் பாஸில் பங்கேற்று ரசிகர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளாரா? என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளனர்.

தாமரை கணவர்

தாமரை கணவர்

பிக் பாஸ் சீசன் 5, பிக் பாஸ் அல்டிமேட் மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என விஜய் டிவியில் பிக்பாஸ் டீமுடனே ஐக்கியமாகி விட்ட தாமரைச் செல்வியின் கணவர் பார்த்தசாரதி அடுத்த சீசனில் பங்கேற்க போவதாக தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ள நிலையில், கணவன் மனைவி இருவருமே மீடியாவில் பிரபலமாக பிளான் போட்டு வருகிறார்களாம்.

Recommended Video

தருமபுரி To Kannada Cinema | Youtuber Patta Murugan Exclusive Interview
பெண்ணாக மாறி

பெண்ணாக மாறி

கடந்த வாரம் நடைபெற்ற உல்டா ரவுண்டில் தாமரைச் செல்வி இம்சை அரசனாகவும் பார்த்தசாரதி ஹீரோயினாகவும் மாறி நடனம் ஆடி இருந்தனர். இந்த கொடுமையெல்லாம் பார்க்கணுமா? என ரசிகர்கள் இருவரையும் பங்கமாக கலாய்த்துத் தள்ளினர். தாமரை ரசிகர்கள் அவர்களது முயற்சியை பாராட்டினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X