twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும் அப்படி என்னதான் பிரச்சினை?

    By Shankar
    |

    இந்தக் கேள்வியைக் கேட்காத இசை ரசிகர்கள் இல்லை. இளையராஜாவின் ரசிகர்களாக இருந்தாலும் சரி, வைரமுத்துவின் அபிமானிகளாக இருந்தாலும் சரி... அல்லது இந்த இருவரையுமே காதலிக்கும் பாரதிராஜாவின் அபிமானிகளும் சரி... இந்தக் கேள்வியை கடந்த 25 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறார்கள்.

    ஆனால் உறுதியான பதில் இல்லை. இதைவிட முக்கியம் இந்த இருவரும் சேரவே கூடாது என நினைக்கும் பாதகர்கள் கொஞ்சமல்ல, ரொம்பவே இருக்கிறார்கள் என்பது, இந்த நிகழ்ச்சியில் நடுவர் என்ற பெயரில் படுத்தும் சிலரைப் பார்த்த போது புரிந்தது!

    சரி இருவருக்கும் அப்படி என்னதான் பிரச்சினை? இதோ.. சமீபத்தில் வெளிவந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வைரமுத்துவே சொன்ன பதில்கள் முழுமையாக...

    பிரிந்த சாதனையாளர்கள்...

    பிரிந்த சாதனையாளர்கள்...

    பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவும், இளையராஜாவும் பிரிந்தார்கள். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வது கூட கிடையாது.

    கட்டி முடிக்கப்படாத மொட்டைக் கோபுரம்

    கட்டி முடிக்கப்படாத மொட்டைக் கோபுரம்

    இந்நிலையில் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா பேசியபோது, மதுரையில் ஒரு கோபுரம் கட்டிமுடிக்கப்படாமல் மொட்டைக்கோபுரமாய் இருக்கிறது. மீண்டும் அந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட வேண்டும். இளையராஜா - பாரதிராஜா - வைரமுத்து என்ற கூட்டணி மீண்டும் வர வேண்டும் என்ற தனது ஆசையை கூறினார்.

    இது பாரதிராஜாவின் ஆசை மட்டுமல்ல. லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆசையும் கூட. இதையே அந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு வைரமுத்து சொன்ன பதில்..

    அதற்கு வைரமுத்து சொன்ன பதில்..

    "இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும் என்னதான் பிரச்சனை? இளையராஜாவிற்கு இளையராஜா பிரச்சனை. வைரமுத்துவிற்கு வைரமுத்து பிரச்சனை!"

    இருவரும் மீண்டும் பணியாற்றும் சூழல் இருக்கிறதா?

    இருவரும் மீண்டும் பணியாற்றும் சூழல் இருக்கிறதா?

    "காலம் கடந்துவிட்டதாக நினைக்கிறேன். விருப்பங்கள் வேறு; யதார்த்தங்கள் வேறு. இப்போது கூட அவரது இசையை நேசிக்கிறேன். பழைய பாடல் கேட்கிற போதெல்லாம் நெகிழ்ச்சி ஏற்படுகிறது. பார்த்து பேசலாம் என்றுகூட தோன்றுகிறது. ஆனால், சில சின்னச்சின்ன தடைகள் பெரிய பெரிய சுவர்களை எழுப்புகின்றன. அந்த சுவர்கள் இல்லை என்று நான் தீர்மானிக்கிறபோது, அது சாத்தியமாகலாம். ஒன்று, அந்த சுவர்கள் இடியலாம். அல்லது சிலர் இடிக்கலாம். அதன்பிறகு உறவுகள் எப்படி சாத்தியமாகிறது என்று பார்ப்போம்.

    காலத்தின் கட்டளைப்படி..

    காலத்தின் கட்டளைப்படி..

    என்னோடு சேர்ந்துதான் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில் அவர் இல்லை. அவரோடு சேர்ந்துதான் பணியாற்றி ஆகவேண்டும் என்கிற சூழ்நிலையிலும் நான் இல்லை. ஆனால், காலம் என்ன சொல்கிறதோ, அதைக்கேட்டு கட்டுப்படுவதற்கு நான் காத்திருப்பது மாதிரியே அவரும் காத்திருந்தால், சாத்தியமாகலாம்.

    எப்பொழுது வரும் அந்த வசந்தகாலம்?

    எப்பொழுது வரும் அந்த வசந்தகாலம்?

    தாவரங்களுக்கு வசந்தகாலம் வருடா வருடம் வருவதுண்டு. கலைத்துறையின் வசந்தகாலம் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் வரும் என்று தோன்றுகிறது. வேண்டாம் என்று நான் நினைக்கவில்லை. காலம் எப்படி கட்டளையிடுகிறது என்றும் தெரியவில்லை.

    எங்களுக்கான ரசிகர்கள் இருக்கிறார்களா...

    எங்களுக்கான ரசிகர்கள் இருக்கிறார்களா...

    ஒவ்வொரு காலகட்டத்திலும் சில சேர்மானங்கள்தான் வெற்றிபெறுகின்றன. இப்போது நாங்கள் மீண்டும் இணைந்தால் பழைய இளமை, பழைய கூட்டணி, பழைய இயக்குநர்கள், பழைய கதை, பழைய தளம் எல்லாவற்றையும் விட எங்கள் பழைய ரசிகர்கள் இருக்கிறார்களா என்று எனக்கு தோன்றவில்லை.

    இது பழசு என்பார்கள்...

    இது பழசு என்பார்கள்...

    பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது. இப்போது ஊடக பெருக்கத் திற்கு பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழர்கள், ரசிகர்கள் மாறி மாறிப்போய்க் கொண்டிருக் கிறார்கள். எனவே, நாங்கள் இனிமேல் இணைந்து பணியாற்றினால், என்பதுகளில் நாங்கள் கொடுத்த பாடல்களைப்போல நாங்கள் எழுதிக் கொடுத்து இசையமைத்தால், அது பழைய பாடல் என்று சொல்லுவார்கள் தமிழர்கள்.

    ...அல்லது எங்கே அந்த பழைய ஜீவன் என கேட்பார்கள்!

    ...அல்லது எங்கே அந்த பழைய ஜீவன் என கேட்பார்கள்!

    அதை விட்டு விட்டு நவீன பாணியில் அவர் இசையமைத்து, நவீன மொழியில் நான் பாட்டெழுதி, நவீமனான முறையில் படமாக்கப்பட்டால், எங்கே போயிற்று இவர்களின் பழைய ஜீவன் என்று கேட்பார்கள். இந்த இரண்டு பழிகளுக்கு மத்தியில் நாங்கள் தனித்திருப்பதே வெற்றி!''

    -இது வைரமுத்துவின் பதில். இருவருக்குமான பிரச்சினை என்ன என்பதற்கு அவர் வாயே திறக்கவில்லை.

    எதற்கு இந்த கெக்கே பிக்கே சிரிப்பு?

    எதற்கு இந்த கெக்கே பிக்கே சிரிப்பு?

    இதெல்லாம் கிடக்கட்டும்.. வைரமுத்துவின் இந்த பதிலுக்கு நடுவர் என்ற சீட்டில் உட்கார்ந்திருந்த பாடகர் சீனிவாஸ் கெக்கே பிக்கேவென சிரித்து, பார்த்தீர்களா.. இருவரும் சேர்ந்துடுவாங்களா.. அதெப்படி சாத்தியம்! என்பதுபோல பார்வையாளர்களை சாடையாகக் கேட்டு கைத்தட்டியது எதற்காக என்றுதான் புரியவில்லை.. இருவரும் சேர்வதில் இவரைப் போன்றவர்களுக்கு என்ன சங்கடமோ!!

    English summary
    Recently Poet Vairamuthu replied a detailed answer for his long rivalry with MAESTRO Ilayarajaa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X