வாவ்...செம ஹாட்...தலைவர் ரஜினியுடன் அடுத்து ஜோடி சேர போவது இவரா?
சென்னை : ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தின் முக்கிய அப்டேட்டாக ரஜினியுடன் அடுத்தபடியாக ஜோடி சேர போகும் ஹீரோயின் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கோலிவுட்டின் டாப் ஹாட் டாப்பிக்காக இருக்கும் விஷயங்களில் ஒன்று ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169. ரஜினியை அடுத்து இயக்க போவது யார் என்ற விவாதம் தீவிரமாக போய் கொண்டிருந்தது. இந்நிலையில் தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க போவதாக சன் பிக்சர்ஸ் சமீபத்தில் அறிவித்தது.

தலைவர் 169 ல் இணையும் 2 டாப் ஹீரோக்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தலைவர் 169 படத்திற்கு அனிருத் இசையமைக்க போவதாக ஸ்பெஷல் வீடியோவுடன் அறிவிப்பு வெளியிட்டது சன் பிக்சர்ஸ். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய ரோலில் நடிக்க போவதாகவும், சிம்பு பாடல் ஒன்றை பாட போவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

ஓ...இதுக்காக தான் வெயிட்டிங்கா
சமீபத்திய தகவலின்படி ஏப்ரல் 14 ம் தேதி தலைவர் 169 படத்தின் பூஜை நடைபெற உள்ளதாகவும், மே மாதம் தலைவர் 169 ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. லேட்டஸ்ட் தகவலின் படி, நெல்சன் திலீப்குமார் மற்றும் சன் பிக்சர்ஸ் தற்போது விஜய்யின் பீஸ்ட் பட வேலைகளில் இருப்பதால் பீஸ்ட் ரிலீசிற்கு பிறகு தலைவர் 169 படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை துவங்க போகிறார்களாம்.

என்னது ரஜினிக்கு ஜோடி இவரா
மற்றொரு புதிய அப்டேட் என்னவென்றால், தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தில் 2010ம் ஆண்டு நடித்துள்ளார். இதனால் ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேர அவர் ஓகே சொல்வாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஓகே சொல்வாரா
ஐஸ்வர்யா ராய் தற்போது தான் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் நந்தினி, மந்தாகினி தேவி என இரட்டை ரோல்களில் ஐஸ்வர்யா நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருவதால், அந்த படத்தின் வேலைகள் முடிவடைவதற்கு முன் தலைவர் 169 படத்தில் நடிக்க அவர் ஓகே சொல்வரா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

ஹீரோயின் யாராக இருக்கும்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த அண்ணாத்த படத்தில் நயன்தாரா, ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு முன் தர்பார் படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார். பேட்ட படத்தில் த்ரிஷா, சிம்ரன் இருவரும் நடித்திருந்தனர். இந்நிலையில் தலைவர் 169 ஹீரோயினாக நடிக்க போவது யார், ஐஸ்வர்யா ராய் ஓகே சொல்வாரா என்ற எதிர்பார்ப்புக்கள் ரசிகர்களிடம் அதிகரித்து காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











