பணப் பெட்டியுடன் வெளியேற போகிறவர் இவர் தானா...சஞ்சீவ் வெளிப்படுத்திய ரகசியம்
சென்னை : பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போகிறவர் யார் என்பதை விட, இந்த வாரம் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு தான் அனைவரிடமும் அதிகரித்து காணப்படுகிறது.
இன்றைய ப்ரோமோவில் ரூ.3 லட்சம் பணப் பெட்டியுடன் வந்து, அட்வைஸ் செய்து பேசி விட்டு போய் உள்ளார் சரத்குமார். இதை பார்த்து விட்டு, தொகை குறைவாக உள்ளது என சிலரும், பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேற போவது இவரா இருக்குமோ அல்லது அவராக இருக்குமோ என ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓப்பனாக சொன்ன சஞ்சீவ்
ஆனால் கடந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் போதே பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு யார் வெளியேறுவார் என்ற ரகசியத்தை ராஜுவிடம் ஓப்பனாக சொல்லி விட்டார் சஞ்சீவ். இதனால் ரசிகர்களின் கவனமும் அந்த போட்டியாளர்கள் மீது மட்டுமே உள்ளது.

சஞ்சீவ் சொன்ன சீக்ரெட்
ஃபினாலே டிக்கெட்டிற்கான முதல் டாஸ்க் முடிந்து நிரூப் வெளியேற்றப்பட்டார். அன்று இரவு ராஜுவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, பணப் பெட்டி டாஸ்க் வரும் போது நான், நிரூப், தாமரை மூவரில் ஒருவர்தான் அதை எடுத்துக்கொண்டு வெளியேறுவோம். இந்த வாரம் நான் போகவில்லை என்றால், பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு நான் வெளியேறி விடுவேன். எனக்கு அது ரொம்ப முக்கியம்.

எனக்கு பணம் தேவையில்லை
ஒரு பையன் ரொம்ப கஷ்டப்படுறான். அவனுக்கு படிக்க வேண்டும் என ஆசை. அதே போல் ஒரு விதவை பெண். குழந்தையை படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அவர்களுக்கு இந்த பணத்தை கொடுத்து விடுவேன். மற்றபடி இந்த பணம் எனக்கு தேவையில்லை. எனக்கு வருகிற பணமே போதும். அவர்களுக்காக மட்டும் தான் பணப் பெட்டியை எடுக்க நினைக்கிறேன் என கூறுகிறார் சஞ்சீவ்.

இவர் தான் போக போகிறார்கள்
அப்படியே நான் போய் விட்டால் நிரூப், தாமரை இருவரில் யாராவது தான் நிச்சயம் அந்த பணப் பெட்டியை எடுப்பார்கள். பாவனி எப்படி என சரியாக தெரியவில்லை என்கிறார் சஞ்சீவ். மற்றவர்களை பற்றி சரியாக கணித்து சொல்ல கூடியவர் என்ற பெயரை வந்த சிறிது நாட்களிலேயே வாங்கியவர் சஞ்சீவ். அதனால் அவரின் இந்த கணிப்பும் சரியாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.
Recommended Video

நிரூப் தெளிவா சொல்லிட்டாரே
அதே சமயம் ஃபினாலே டாஸ்க்கின் ஆரம்பத்திலேயே தான் வெளியேற்றப்பட்டது. தன்னால் விளையாட முடியாமல் போனது, மற்றவர்கள் தனியாக விளையாடாமல் குரூப்பாக சேர்ந்து விளையாடினார்கள், நியாயமாக விளையாடவில்லை போன்ற ஏமாற்றம், கோபத்தில் இருந்த நிரூப்பிடம் இந்த வாரம் கமல் பேசியது, அதற்கு பிறகு 20 லட்சம் கொடுத்தாலும் போக மாட்டேன் என சொன்னது ஆகியவற்றை வைத்து பார்த்தால் நிரூப் அந்த பணத்தை எடுக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

அப்போ இவர் தான் போவாரா
அவருக்கு பதில் தாமரை தான் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கூறுகிறார்கள். அவர் தான் விட்டுக் கொடுப்பதை போல் கடந்த சில நாட்களாக பேசி வருகிறார். அவர் வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











