பிக்பாஸ் சீசன் 5... இந்த வாரம் வெளியேற போவது யார் ?

சென்னை : விஜய் டிவி.,யில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தின் இறுதியை நெருங்கி வருகிறது. கமல் வரும் வார இறுதி எபிசோட் நெருங்கி வருகிறது. இந்த வாரத்தின் தலைவராக சிபி இருந்து வருகிறார்.

இதுவரை நமீதா மாரிமுத்து மற்றும் நாடியா சாங் போட்டியில் இருந்து வெளியேறி உள்ள நிலையில், அடுத்தபடியாக வெளியேற போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரண்டாவது நபரை வெளியேற்றுவதற்கான நாமினேஷன் இந்த வார துவக்கத்தில் நடைபெற்றது.

இதில் 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். நாமினேட் செய்யப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பெண் போட்டியாளர்கள். மக்கள் அளிக்கும் ஓட்டுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த 9 பேரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ளார். நாமினேட் ஆன 9 போட்டியாளர்களும், எவிக்ஷனில் இருந்து தப்பித்து கொள்ள வழி அமைத்தும் கொடுப்பதற்கான டாஸ்க் இந்த வாரம் நடைபெற்று வருகிறது.

இந்த வார டாஸ்க்

இந்த வார டாஸ்க்

வீட்டில் வைக்கப்பட்டிருந்த பஞ்ச பூதங்களின் பெயர்கள் அடங்கிய நாணயங்களை கைப்பற்ற ஹவுஸ்மெட்கள் போட்டி போட்டி விளையாடி வருகின்றனர். விளையாட்டின் முடிவில் அதில் நாணயங்கள் வைத்திருக்கும் ஒருவர் தாங்கள் அல்லது தங்களுக்கு விருப்பமான ஒருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்ற முடியும்.

பெண்களுக்கு ஆதரவு

பெண்களுக்கு ஆதரவு

லேட்டஸ்ட் தகவலின் படி, நாமினேட் செய்யப்பட்ட 9 பேரில் ஏற்கனவே 5 பேர் காப்பாற்றப்பட்டு விட்டார்களாம். பெண் போட்டியாளர்கள் நேர்மையாக விளையாடி வருவதாக ஏற்கனவே பலர் பாராட்டி வருகின்றனர். இதனால் பெண் போட்டியாளர்கள் 5 பேர் மக்களிடம் அதிக ஓட்டுக்களை பெற்று, சேவ் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.

காப்பாற்றப்பட்ட 5 பேர்

காப்பாற்றப்பட்ட 5 பேர்

பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா ரெட்டி, தாமரைச் செல்வி, இசைவாணி ஆகியோருக்கு மக்கள் அதிக ஓட்டளித்து, சேவ் செய்து விட்டார்களாம். அதனால் இவர்கள் ஐந்து பேர் இந்த வாரம் வெளியேற மாட்டார்களாம். அதே சமயம், ஐக்கி பெர்ரி, அபினய், சின்ன பொண்ணு, அபிஷேக் ராஜா ஆகியோர் மிக குறைவாக ஓட்டுக்களை வாங்கி உள்ளதால் டேஞ்சர் ஜோனில் உள்ளார்களாம்.

பிரியங்கா வாங்கிய ஓட்டு

பிரியங்கா வாங்கிய ஓட்டு

டேஞ்சர் ஜோனில் இருக்கும் நான்கு பேரும் 10,000 அல்லது அதற்கும் குறைவான ஓட்டுக்களை தான் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்காவுடன் ஒப்பிடுகையில் இவர்கள் நான்கு பேரும் பெற்றுள்ள ஓட்டுக்கள் மிக குறைவாம். 60,000 க்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்று, பிரியங்கா தான் போட்டியாளர்களில் முதல் இடத்தில் உள்ளாராம்.

இவருக்கு தான் குறைந்த ஓட்டு

இவருக்கு தான் குறைந்த ஓட்டு

இதுவரை மக்கள் அளித்துள்ள ஓட்டுக்களின் அடிப்படையில் மிகக் குறைந்த ஓட்டுக்கள் பெற்றுள்ளது அபிஷேக் தானாம். அப்படி பார்த்தால் இந்த வாரம் அபிஷேக் வெளியேற போவது உறுதியாகி உள்ளது. ஆனால் பிக்பாஸ் சீசன் 5 ஐ பொறுத்தவரை, ப்ரோமோக்களுக்கு கன்டன்ட் தருவது அபிஷேக் தான். இதுவரை வெளியிடப்பட்ட பெரும்பாலான ப்ரோமோக்களில் அபிஷேக் கண்டிப்பாக இருக்கிறாராம்.

கமல் என்ன சொல்ல போகிறார்

கமல் என்ன சொல்ல போகிறார்

பிக்பாஸ் சீசன் 5 துவங்கியதில் இருந்தே போட்டியாளர்களில் சோஷியல் மீடியாக்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டவரும், அதிகமாக பேசப்பட்டவரும் அபிஷேக் தானாம். அதனால் அபிஷேக் வெளியேற்றப்படுவாரா அல்லது ஏதாவது குறுக்கு வழியை பின்பற்றி அபிஷேக்கை போட்டியில் தொடர செய்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை கமல் என்ன சொல்ல போகிறார் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X