»   »  ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிக்கிம், கனடா அரசுகள் கவுரவம்: தமிழக அரசு எப்போ? #ARRahman

ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிக்கிம், கனடா அரசுகள் கவுரவம்: தமிழக அரசு எப்போ? #ARRahman

Posted By:
Subscribe to Oneindia Tamil
செய்ய தவறிய தமிழகம்.. பெருமைபடுத்திய சிக்கிம் ..!!

சென்னை: பிற மாநிலம், நாட்டவர்களுக்கு தெரிந்த ஏ.ஆர். ரஹ்மானின் அருமை தமிழக அரசுக்கு இன்னும் தெரியவில்லையா என்று நெட்டிசன்ஸ் கேட்கிறார்கள்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கோலிவுட், பாலிவுட் துவங்கி ஹாலிவுட் வரை பணியாற்றி வருகிறார். சிக்கிம் அரசு அவரை தங்கள் மாநில பிராண்ட் அம்பாசிடராக்கி கவுரவித்துள்ளது.

Will TN government honour AR Rahman?

இதை பார்த்து ரஹ்மான் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனடாவின் ஆன்டாரியோ நகரில் ரஹ்மானை கவுரவிக்கும் வகையில் அல்லாஹ் ராக்கா ரஹ்மான் தெரு என்று ஒரு தெருவிற்கு பெயர் வைத்துள்ளனர்.

அடுத்த மாநிலத்தவர்கள், ஏன் வெளிநாட்டவர்கள் கூட ரஹ்மானை கவுரவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருமையாக உள்ளது. அதே சமயம் அவரின் சொந்த மாநில அரசு ஏன் அவரை கண்டுகொள்ளவில்லை என்ற ஏக்கமும் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஏ.ஆர். ரஹ்மான் சாலை வருமா என்ற எதிர்பார்ப்பில் அவர் ரசிகர்கள் உள்ளனர். இசைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sikkim government has named music composer AR Rahman as their Brand Ambassador. Canada government has named a street in honour of Rahman. People are expecting Tamil Nadu government to honour the legend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X