இன்று எளிமினேஷன் இருக்குமா... முதலில் வெளியேற போவது யார் ?

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வெற்றிகரமாக முதல் வாரத்தை நிறைவு செய்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. கமல் வரும் வார இறுதி எபிசோட் இன்றும், நாளையும் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு 18 போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர். இவர்களில் நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களால் போட்டியில் இருந்து தானாகவே முன்வந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இது உண்மை தானா, அவருக்கு பதில் மிலா வர போவதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது. இவை பற்றி இன்று கமல் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலகலப்பான முதல் வாரம்

கலகலப்பான முதல் வாரம்

பெரிய அளவில் சண்டை, மோதல், காரசார வாக்குவாதங்கள் ஏதும் இல்லாமலும், கலகலப்புக்கு பஞ்மில்லாமல் போய் கொண்டிருக்கிறது. முந்தைய சீசன்களை போல் இல்லாமல் நல்ல பொழுபோக்காகவும், காமெடியாகவும் இந்த சீசன் போய் கொண்டிருக்கிறது. தொடர்ந்து ரசிக்கும்படி இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

எளிமினேஷன் நடக்குமா

எளிமினேஷன் நடக்குமா

இந்நிலையில் முதல் முறையாக கமல் வரும் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளதால் பரப்பாக உள்ளது. வழக்கமாக கமல் வரும் வார இறுதி நாட்களில் எளிமினேஷன் நடைபெறும். ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இன்று எளிமினேஷன் நடைபெறுமா என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

முதல் வாரமே எளிமினேஷனா

முதல் வாரமே எளிமினேஷனா

பொதுவாக முதல் வாரம் எளிமினேஷன் இருக்காது தான். இருந்தாலும் போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதால் முதல் வாரத்திலேயே இந்த முறை எளிமினேஷனை பிக்பாஸ் துவக்க போகிறாரா என தெரியவில்லை. அதே சமயம் மருத்துவ காரணங்களால் நமீதா மாரிமுத்து வெளியேறி உள்ளதால் இந்த வாரத்திற்கு பதிலாக, அடுத்த வாரம் எளிமினேஷன் ப்ரோசஸ் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் வெளியேற வாய்ப்பு

யார் வெளியேற வாய்ப்பு

ஒருவேளை இந்த வாரமே எளிமினேஷன் ப்ரோசஸ் நடத்தப்பட்டால் அபிஷேக் ராஜா வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு எதிரான சந்தேகங்கள், புகார்கள், கேள்விகள் அதிகம் எழுப்பப்படுவதால் நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக அவர் வெளியேற வாய்ப்புள்ளதாக ஒரு தரப்பு தகவல்கள் கூறுகிறது. இன்று வெளியான ப்ரோமோவை பார்த்து விட்டு அபிஷேக் முழியே சரியில்லையே. அப்போ எளிமினேஷன் கண்டிப்பா இருக்குமோ என நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.

இவர்கள் வெளியேறுவார்களா

இவர்கள் வெளியேறுவார்களா

அதே சமயம், கடந்த ஒரு வாரத்தில் குறைந்த அளவு பங்களிப்பை கொடுத்த மதுமிதா போன்றவர்கள் யாராவது முதல் நாளாக வெளியேற்றப்படலாம் எனவும் மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் முதல் ஆளாக வெளியேற வேண்டும் என்ற கேள்விக்கு பலரும் பல விதமாக பதில் கொடுத்துள்ளனர்.

நமீதா வர வேண்டும்

நமீதா வர வேண்டும்

ஆனால், நீங்கள் யாரை வேண்டுமானாலும் வெளியேற்றுங்கள். நமீதாவை மீண்டும் உள்ளே கொண்டு வாருங்கள் என ஏராளமான ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இப்போது இல்லாவிட்டாலும் Wildcard ரவுண்டிலாவது நமீதாவை உள்ளே கொண்டு வாருங்கள் என ஏராளமான ரசிகர்கள் விஜய் டிவி.,யை கேட்டு வருகின்றனர். வந்த ஒரு வாரத்திலேயே நமீதா டாப் ஸ்டார் ஆகி விட்டாரே என பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X