Just In
- 39 min ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 45 min ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 54 min ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 1 hr ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
Don't Miss!
- Automobiles
2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது
- News
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு... கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவாமே... ஆய்வு சொல்கிறது!
- Sports
"இங்க வாங்க லைன்".. போட்டிக்கு பின் ரஹானே செய்த காரியம்.. மனிதனாக உயர்ந்து நின்ற அந்த நிமிடம்!
- Education
டிப்ளமோ முடித்தவரா நீங்க? ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி!
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அஜீத்தின் புதிய படத்தில் ரெண்டாவது நாயகி எமி இல்லையாம்.. த்ரிஷாவாமே ?
சென்னை: கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் இரண்டு நாயகிகள் என்றும், அதில் ஒன்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டபடி அனுஷ்கா என்றும் மற்றொரு நாயகி எமி ஜாக்சன் என்றும் முன்னர் சொல்லப் பட்டது. ஆனால், தற்போது அந்த ரெண்டாவது நாயகியாக த்ரிஷா நடிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய படங்களில் 'சால்ட் அண்ட் பெப்பர்' எனச் சொல்லப் படும் நரைத்த முடிகளுடன் கூடிய கெட்டப்பில் நடித்த அஜீத், கௌதம் படத்தில் மிகவும் இளமையான தோற்றத்தில் வருகிறார் என முந்தைய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், அஜீத்தின் நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தமாகியிருப்பதாகவும் சொல்லப்பட்டது. பின்னர் அப்படத்தில் இரண்டு நாயகிகள் என்றும், அது மதராசப்பட்டிணம் எமி என்றும் தகவல் வெளியானது. ஆனால், தற்போது அஜீத்தின் மற்றொரு நாயகி எமி அல்ல, த்ரிஷா எனச் சொல்லப் படுகிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா...
ஏற்கனவே, கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக ‘விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் நடித்திருந்தார் த்ரிஷா.

விளையாடு மங்காத்தா...
அஜீத்துடனும் கிரீடம், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் த்ரிஷா இணைந்து நடித்துள்ளார்.

மற்றொரு நாயகி....
இந்நிலையில் கௌதம் தனது அஜீத் படத்திற்கு மற்றொரு நாயகியாக எமிக்குப் பதில் த்ரிஷாவை நடிக்க வைக்க தீர்மானித்துள்ளதாக படக்குழுவினருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆக்ஷன் த்ரில்லர் படம்....
இப்படம் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்டதாம். இதற்கான படப்பிடிப்பு வரும் 9ம் தேதி தொடங்கப் பட உள்ளது.

ஒரே மூச்சில் படப்பிடிப்பு....
ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிடப் பட்டுள்ளதாம். கதை சிறிதும் கசிந்து விடாமல் இருக்க பலத்த பாதுகாப்பாம்.