இன்னிக்கு வலிமை இரண்டாவது சிங்கிள் வருதா...மீண்டும் ட்விட்டரை தெறிக்க விடும் வலிமை
சென்னை : ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. எந்த நேரத்திலும் ஷுட்டிங் முடிந்து விட்டது என்ற அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு செப்டம்பர் முதல் வாரத்தில் வலிமை படக்குழு சென்னை திரும்பும் என கூறப்படுகிறது.
இதனால் வலிமை படம் தீபாவளி ரிலீசா, ஆயுத பூஜை ரிலீசா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளரான போனி கபூர் எப்போது அறிவிப்பை வெளியிடுவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படம் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்படும் என்பதால் தியேட்டர் உரிமையாளர்களும் ரிலீஸ் தேதியை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

காத்திருக்கும் படங்கள்
அது மட்டுமல்ல ரஜினியின் அண்ணாத்த படம் தீபாவளி ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால், மற்ற படங்கள் தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கி விட்டன. இப்போது அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதியை பொறுத்தே தங்கள் படங்களின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய கோலிவுட் தயாரிப்பாளர்கள் பலரும் காத்துக் கிடக்கின்றனர்.

மீண்டும் டிரெண்டிங்கான வலிமை
இதற்கிடையில் இன்று மீண்டும் ட்விட்டரில் வலிமை ஹாஷ்டாக் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. ValimaiSecondSingle என்ற ஹாஷ்டாக் செம டிரெண்டிங் ஆகி உள்ளது. இன்று வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவே இந்த ஹாஷ்டாக் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.

இன்று யுவன் பிறந்தநாள்
இதற்கு காரணம், வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவின் பிறந்தநாள் இன்று. அதோடு அஜித்தின் 50 வது படமான மங்காத்தா படம் ரிலீசானதும் இன்று தான். சமீப காலமாக படத்தின் ஹீரோ, டைரக்டர், இசையமைப்பாளர் போன்றோரின் பிறந்தநாள், முக்கிய நாட்கள் ஆகியவற்றில் படம் பற்றிய அப்டேட், ஃபஸ்ட்லுக், படத்தின் டைட்டில், டிரைலர், ஃபஸ்ட் சிங்கிள் போன்றவை வெளியிடப்படுவது வழக்கமாகி வருவதால் யுவனின் பிறந்தநாளான இன்று இரண்டாவது சிங்கிள் வெளி வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

வெங்கட் பிரபுவின் அப்டேட்
டைரக்டர் வெங்கட் பிரபுவும் கடந்த சில நாட்களுக்கு முன், வலிமை மற்றும் மாநாடு படங்களின் இரண்டாவது சிங்கிளை யுவன் முடித்து விட்டதாகவும், விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் எப்போது இரண்டாவது சிங்கிள் வரும் என காத்திருந்த ரசிகர்கள், இன்று வரலாம் என எதிர்பார்க்க துவங்கினர்.
Recommended Video

இன்று இல்லையா
ஆனால் நம்ப தகுந்த சினிமா வட்டாரங்கள் கூறுகையில், இன்று வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் வருவதற்கு வாய்ப்பில்லை. அதற்கு இன்னும் சில காலம் பொறுக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதாவது வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் முடிக்கப்பட்ட பிறகே அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

நாங்க வேற மாரி
சில வாரங்களுக்கு முன்பு தான் வலிமை படத்தின் முதல் சிங்கிளான, நாங்க வேற மாரி பாடல் வெளியிடப்பட்டது. அனைவரையும் ஆட்டம் போட வைத்து, இந்த பாடல் புதிய சாதனையே படைத்து விட்டது. இந்த பாடலை இப்போது வரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ட்விட்டர் டிரெண்டிங்கில் வலிமை
சமீபத்தில் தான் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் அதிக முறை டிரெண்டிங் ஆன டாப் 10 தலைப்புக்களை ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டது. அதில் முதல் இடத்தில் வலிமையும், டாப் 5 பட்டியலில் அஜித் பெயரும் இடம்பிடித்திருந்தது. இது அறிவிக்கப்பட்டு சில நாட்களே ஆகும் நிலையில், இன்று மீண்டும் வலிமை ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











