For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ’அட்ஜெஸ்ட்மென்ட்’ விவகாரம்.. வனிதா கேட்பாங்களா? மாட்டாங்களா? சரியான கேள்வி கேட்ட ரசிகர்கள்!

  |

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 மற்றும் சீசன் 3 போட்டியாளர்கள், சீசன் 4 போட்டியாளர்களுடன் தீபாவளி ஸ்பெஷல் நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ளும் அதிரடி புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வனிதா விஜயகுமாரின் என்ட்ரியை பார்த்த ரசிகர்கள், பாலாஜியிடம் அந்த 'அட்ஜெஸ்ட்மென்ட்' மேட்டர் பத்தி கேட்பாங்களா? மாட்டாங்களா? என ரசிகர்கள் சரியான பாயிண்ட்டை பிடித்து விட்டனர்.

  கமல் சாரே கண்டுக்கல.. இவங்க எங்க கேட்கப் போறாங்க, எல்லாம் வெளி வேஷம் தான் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

  பழசு vs புதுசு

  பழசு vs புதுசு

  பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து எந்த ஆளும் கிடைக்கல போல இருக்கு, இரண்டாவது சீசனில் இருந்து சில பேரையும், மூன்றாவது சீசனில் இருந்து சில பேர்களையும் வீடியோ கால் மூலமாக தீபாவளி சிறப்பு பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் டிவி அழைத்துள்ளது. புதிய போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொல்லப் போறாங்களா வச்சு செய்யப் போறாங்களான்னு இன்னைக்கு ஷோவில் தெரிஞ்சுடும்.

  ஈக்கு என்ன வேலை

  ஈக்கு என்ன வேலை

  வனிதா விஜயகுமார், ஷெரின், ஐஸ்வர்யா தத்தா, விஜயலக்‌ஷ்மி, மகத் மற்றும் சாண்டி என முந்தைய சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் புரமோவை பார்த்த இந்த ரசிகர், "இரும்பு அடிக்கிற இடத்துல 'ஈ'க்கு என்ன வேலை என்பது போல, போன சீசன் போக்கிரிகளுக்கு இங்க என்ன வேலை? அவங்களை பார்க்கணும்னு யாரும் சொல்லலையே" என ரொம்பவே நக்கல் அடித்துள்ளார். வனிதா விஜயகுமார், ஷெரின், ஐஸ்வர்யா தத்தா, விஜயலக்‌ஷ்மி, மகத் மற்றும் சாண்டி என முந்தைய சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் புரமோவை பார்த்த இந்த ரசிகர், "இரும்பு அடிக்கிற இடத்துல 'ஈ'க்கு என்ன வேலை என்பது போல, போன சீசன் போக்கிரிகளுக்கு இங்க என்ன வேலை? அவங்களை பார்க்கணும்னு யாரும் சொல்லலையே" என ரொம்பவே நக்கல் அடித்துள்ளார்.

  சோமுக்கு ரூட் விடும் ஐஸ்

  சோமுக்கு ரூட் விடும் ஐஸ்

  பிக் பாஸ் வீட்டின் ரொமான்டிக் பாய் என பிக் பாஸ் இரண்டாவது சீசன் சர்வாதிகாரி ஐஸ்வர்யா தத்தா சொல்வதை கேட்ட ரசிகர்கள், ஆக்டிவிட்டி ஏரியாவிலே.. கான்ஃப்ரன்ஸ் காலிலே, சோமுக்கு ஐஸ் வைக்கும் ஐஸ்.. அடடே ஆச்சர்யக்குறி என போட்டு பங்கம் பண்ணி உள்ளார்.

  பாலாஜிக்கு ஜெலுசில் பார்சல்

  பாலாஜிக்கு ஜெலுசில் பார்சல்

  ஷிவானி நாராயணனை சுத்தி சுத்தி ரொமான்ஸ் பாலாஜி பண்ணாலும், ஐஸ்வர்யா தத்தா புரமோவில், சோமசேகரை ரொமான்ட்டிக் பாய் என சொன்னதை கேட்ட பாலாஜி ஹேட்டர்கள், பாலாஜிக்கு ஒரு ஜெலுசில் பார்சல், நல்லா வயிறு எரியும் என்று கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

  ரொமான்டிக் பாய் சோம்

  ரொமான்டிக் பாய் சோம்

  இவ்ளோ அழகா சிரிச்சா ரொமான்டிக் பாய்னு சொல்லாமல் வேற எப்படி சொல்றதாம் என ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் திடீரென சோமசேகரை தங்களது லேட்டஸ்ட் கிரஷ் ஆக மாற்றி விட்டனர். பாவம் ரம்யா பாண்டியனுக்கு செம போட்டி இருக்கும் போல தெரிகிறது.

  இனிமே இவனை நம்பலாமா

  இனிமே இவனை நம்பலாமா

  பாலாஜி கூட சேர்ந்து விளையாடி அப்படியே ஃபைனல்ஸ் போயிடலாம் என தப்புக் கணக்கு போட்டு சுத்திக் கொண்டிருக்கும் ஷிவானி, பிக் பாஸ் பாலாஜியை நல்லா மந்திரிச்சி விட்ட பிறகு, "உன்னை நம்பி தொடர்ந்து விளையாடலாமா.. இப்படி சொதப்பிட்டியே கொமரு" என மைண்ட் வாய்ஸில் பேசுவது போல போட்டு வெளுத்து எடுத்துள்ளனர்.

  அட்ஜெஸ்ட்மென்ட் பத்தி வனிதா கேட்பாங்களா

  அட்ஜெஸ்ட்மென்ட் பத்தி வனிதா கேட்பாங்களா

  பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி விவகாரம் தொடர்பாக மீடியாக்களில் அப்படி பேசி கிழித்துத் தொங்க விட்ட வனிதா விஜயகுமார், வீடியோ கான்ஃபரன்ஸ் கால் மூலம் பேசும் போதாவது, பாலாஜியை கேள்வி கேட்டு வெளுப்பாரா? சனம் ஷெட்டி ‘அட்ஜெஸ்ட்மென்ட்' பண்ணித் தான் அழகிப் போட்டியில ஜெயிச்சாங்கன்னு சொன்னதை பத்தி கேட்பாங்களா? என மீம் போட்டு கேள்வி எழுப்பி உள்ளனர்.

  English summary
  Former Bigg Boss contestants cheering up new big boss contestants via video call in today show. Bigg Boss fans asking will Vanitha Vijayakumar talk to Bala about Sanam Shetty adjustment issue.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X