விக்ரம் ஆடியோ விழாவிற்கு விஜய் வருவாரா? மாட்டாரா?... வாழ்த்து மட்டும் அனுப்பினாரா?

சென்னை : விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு விஜய் வருவாரா, மாட்டாரா என்பது தான் ரசிகர்களின் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. விஜய் கலந்து கொள்வது பற்றி பல தகவல்கள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

கமலின் விக்ரம் பட ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, விஜய், சூர்யா கலந்து கொள்ளதாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருந்தனர்.

டிடி பகிர்ந்த ஹேஷ்டேக்

டிடி பகிர்ந்த ஹேஷ்டேக்

ஆனால் தொகப்பாளர் டிடி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் #Vijaythalapathy என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டிருந்ததால் விஜய் நிச்சயம் கலந்து கொள்ள போகிறார் என ரசிகர்கள் கூற துவங்கினர். இதனையடுத்து மாலை 5 மணியளவில் விஜய் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளார் என கூறப்பட்டது. அதே சமயம் சூர்யா கலந்து கொள்ள மாட்டார் என கூறப்பட்டது.

லைவ்வே கிடையாது

லைவ்வே கிடையாது

விழாவில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் வகையில், அதிர்ச்சி அளிப்பதாக, விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழா லைவ் செய்யப்படவில்லை என கூறி உள்ளனர். மாறாக இந்த விழாவில் ஒளிபரப்பு உரிமத்தை விஜய் டிவி மிகப் பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாம். மே 22 ம் தேதி பகல் 3 மணிக்கு தான் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழா ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம்.

வாழ்த்து அனுப்பினாரா விஜய்

வாழ்த்து அனுப்பினாரா விஜய்

விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவை நேரடியாக பார்க்க முடியாததால் ரசிகர்கள் செம அப்செட்டாகி உள்ளனர். இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு, விக்ரம் படம் பிரம்மாண்ட வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்து வீடியோ மெசேஜ் ஒன்றை மட்டும் விஜய் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது மட்டும் கன்ஃபார்ம்

இது மட்டும் கன்ஃபார்ம்

விஜய் வராவிட்டாலும் தளபதி 67 பற்றிய அறிவிப்பு, விக்ரம் ஆடியோ விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம். லோகேஷ் கனகராஜ் தான் தளபதி 67 டைரக்டர் என்பதை இந்த விழாவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பல விதமான தகவல்கள் நிலவுவதால் இந்த விழாவில் விஜய் கலந்து கொள்வாரா, மாட்டாரா என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X