அடுத்த மாசம் வாரிசு ஆடியோ லான்ச்.. எல்லா பக்கமும் பயங்கர நெருக்கடி.. என்ன பேசுவார் விஜய்?

சென்னை: விஜய் படம் வெளியாவதை விட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் என்ன பேசப் போகிறார் என்றும் என்ன குட்டிக் கதை சொல்வார் என்பதை கேட்கவே ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பெரும் ஆவலோடு காத்திருப்பர். கடந்த முறை சன் பிக்சர்ஸ் அதற்கு வாய்ப்பில்லாமல் செய்து விட்டது.

வாரிசு படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், டிசம்பர் மாதம் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவுக்கு தயாரிப்பாளர் தில் ராஜு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலங்கானாவின் வாரிசு படத்திற்கு ஏகப்பட்ட சிக்கல் நிலவி வரும் நிலையில், விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை கேட்க பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தள்ளிப்போன பிரபாஸ் படம்

தள்ளிப்போன பிரபாஸ் படம்

வாரிசு படத்துக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் மிகப்பெரிய தலைவலியாக பிரபாஸின் ஆதிபுருஷ் ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் கால தேதி அறிவிக்காமல் ஒரேயடியாக தள்ளிப் போனது. ஆனால், அதற்கு பதிலாக பவன் கல்யாணின் வால்டர் வீரய்யா, அகில் நடித்த ஏஜேன்ட், பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி என மூன்று படங்கள் வெளியாக உள்ளன.

ஆந்திராவில் ஆபத்து

ஆந்திராவில் ஆபத்து

இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களும் கொடுத்த அழுத்தம் காரணமாக டப்பிங் படங்களுக்கு அதிக தியேட்டர்களை வெளியிடக் கூடாது என ஆந்திரா பிலிம்சேம்பர் அதிரடி தடை உத்தரவையும் பிறப்பித்து வாரசுடு படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தயாரித்து தெலுங்கு இயக்குநர் இயக்கினாலும், முடியாதுங்க பாஸ் என முடக்கி விட்டனர்.

உதயநிதி வேட்டை

உதயநிதி வேட்டை

ஆந்திராவில் அப்படி என்றால், தமிழ்நாட்டில் துணிவு படத்தை வெளியிட போகும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஓனர் உதயநிதி ஸ்டாலின் இப்பவே பல சிங்கிள் தியேட்டர்களை துணிவு படத்தின் ரிலீசுக்காக புக் செய்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பல பிரபல திரையரங்குகள் துணிவு படத்தை வெளியிட கையொப்பம் போட்டு விட்டோம் என்றே ட்வீட் செய்து வருகின்றனர்.

அஜித்துடன் மோதல்

அஜித்துடன் மோதல்

ஜில்லா vs வீரம் படத்துக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் நேரடி மோதலை தவிர்த்து வந்த நிலையில், தற்போது பொங்கலுக்கு இருவரும் மோதி பார்த்து விட முடிவு கட்டியிருப்பது விஜய்க்கு பாதகமாகவே அமைந்திருக்கிறது. பொங்கல் போட்டியில் இருந்தே வாரிசு பின் வாங்கும் சூழல் இருப்பதாகவும் பேச்சுக்கள் கிளம்பி வருகின்றன.

என்ன பேசுவார் விஜய்

என்ன பேசுவார் விஜய்

இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜய் தனது படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து பேசுவாரா? அல்லது அத்தனையையும் சமாளித்து விட்டேன், எதிர்பார்த்த படி பெரியளவில் படம் ரிலீஸ் ஆக என்ன செய்தேன் என்பதை கூறுவாரா? என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X