twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியா.. போட்டியிட்டா ஜெயிப்பாரா?

    |

    சென்னை: நடிகர் விஷால் அடுத்து இப்போது வரவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவார் என்று விஷாலின் நெருங்கிய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் ராதாரவி, சரத்குமார் தரப்பு... நாசர்,விஷால் தரப்பு இடையே அனல் பறந்ததுன்னுதான் சொல்லணும்.

    will vishal win if contest again in nadigar sangam election

    ஒருத்தரின் மேல் ஒருத்தர்னு அவ்வளவு அனல் பறக்கும் வார்த்தைகள் பிரயோகம்...யார் ஜெயிப்பாங்கன்னு எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஜெயிச்சு என்ன செய்யப் போறாங்கன்னும் ஆவல் அதிகரிச்சுது.

    இந்த நிலையிலதான் நடிகர் சங்கத்துக்கு கூடிய விரைவில் தேர்தல் வரப்போகுதுன்னு சொல்றாங்க. மீண்டும் விஷால் போட்டியிடுவார்னும் சொல்றாங்க.

    சென்றமுறை இவர்களுடன் கைகோர்த்த பலரும் இப்போது இவர்களுடன் பகையில் இருக்கிறார்கள். இயக்குநர் பொன்வண்ணன் உட்பட பலரையும் சொல்லலாம்.

    நாசர், விஷால், ரமணா, கார்த்தி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் விஷால் அணியில்தான் இருக்காங்க. போனமுறை நலிவடைந்த கலைஞர்களின் பென்சன், பிள்ளைகளுக்கு கல்வி உதவி, வாழ்வாதார உதவி என்றுதான் வாக்குறுதிகளை முன்வைத்தார்கள் விஷால் தரப்பு.

    ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்... மறைந்த நடிகர் ரித்தீஷின் மனைவி மீது போலீசில் புகார்! ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்... மறைந்த நடிகர் ரித்தீஷின் மனைவி மீது போலீசில் புகார்!

    மிக முக்கியமாக நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது... இதைக்கட்டி முடித்து, அதில் கட்டப்படும் கல்யாண மண்டபத்தில்தான் தனது கல்யாணம் நடக்கும் என்று கூட விஷால் கூறினார்.

    ஆனால், கட்டிடம் கட்டி முடிக்க இன்னும் ஒரு வருடத்துக்கு மேலாகும் என்றும் சொல்கிறார்கள். நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் விஷால் நிற்பாரா... நின்றால் ஜெயிப்பாரா... பிறகுதான் கல்யாணமா என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன.

    English summary
    Vishal's close-up reports suggest actor Vishal will compete in the upcoming actor's election campaign.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X