For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நெற்றி வகிடில் பொட்டு.. என்ன யாஷிகா ஆனந்துக்கு கல்யாணம் ஆகிடுச்சா? ஷாக் ஆகும் ஃபேன்ஸ்!

  |

  சென்னை: நெற்றி வகிடில் பொட்டு வைத்து, சேலையில் அழகாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்தை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என ஷாக்காகி கேட்டு வருகின்றனர்.

  Yashika in Roja Serial • Sun Tv • Entry Promo

  கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள பயிற்சியாளராக திரைத்துறைக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

  இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக்பாஸ் என தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

  அன்கண்டிஷனல் லவ்வாம்ல.. ஐயையோ, பப்பியை வைக்கிற இடமா அது? அலறும் ஃபேன்ஸ், காஞ்சனா நடிகை கப்சிப்! அன்கண்டிஷனல் லவ்வாம்ல.. ஐயையோ, பப்பியை வைக்கிற இடமா அது? அலறும் ஃபேன்ஸ், காஞ்சனா நடிகை கப்சிப்!

  அமுல் பேபி

  அமுல் பேபி

  நல்லா கொழு கொழுவென அமுல் பேபி மாதிரி கோலிவுட்டில் என்ட்ரியான யாஷிகா, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் ஹாட் ஃபேவரைட் நடிகையாக வலம் வருகிறார். தாராளமாக முன்னழகை காட்டியபடி அவர் பதிவிடும் இன்ஸ்டா போட்டோக்களுக்கு இங்கு பல பேர் அடிமையாகி கிடக்கின்றனர்.

  ஓடாய் தேய்ந்து

  ஓடாய் தேய்ந்து

  லட்டு கன்னங்களுடன் அழகாக இருந்த யாஷிகா ஆனந்த், இந்த லாக்டவுனில், தீவிரமாக உடற்பயிற்சி செய்து, தனது உடல் எடையை அநியாயத்துக்கு குறைத்து விட்டார். சமீபத்தில் அவர் பதிவிடும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், முன்பிருந்த யாஷிகா தான் சூப்பர் என்றும், இப்போ ரொம்ப ஓடாய் தேய்ந்து போய்ட்டீங்க, நல்லா சாப்பிடுங்க என அக்கறை காட்டி வருகின்றனர்.

  படுக்கைக்கு வந்தால் வாய்ப்பு

  படுக்கைக்கு வந்தால் வாய்ப்பு

  பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தயக்கமின்றி உலகிற்கு சொல்லும் விதமாக மீடூ இயக்கம் உலகம் முழுவதும் வைரலானது. தனக்கும் அது போன்ற பிரச்சனை ஏற்பட்டதாக கடந்த 2018ம் ஆண்டு யாஷிகா ஆனந்த் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார். படுக்கைக்கு வந்தால் வாய்ப்பு தருவதாக இயக்குநர் ஒருவர் முயன்றதாகவும், தான் அதை மறுத்து அந்த வாய்ப்பை உதறி தள்ளியதாகவும் கூறி இருந்தார்.

  தம்பி ராமைய்யா மகனுடன்

  தம்பி ராமைய்யா மகனுடன்

  மனு நீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் படங்களை இயக்கிய நடிகர் தம்பி ராமைய்யா, தனது மகன் உமாபதி ராமைய்யாவை நாயகனாக வைத்து மணியார் குடும்பம் எனும் படத்தை 2018ம் ஆண்டு இயக்கி இருந்தார். அந்த படத்தில் நடிகை யாஷிகா ஆனந்தும் நடித்து இருந்தார். அதன் பின்னர், நண்பர்களாக மாறிய இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி வந்த நிலையில், இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் கோலிவுட்டில் பறந்தன. ஆனால், அதனை உடனடியாக தம்பி ராமைய்யா மறுத்திருந்தார்.

  வரலக்‌ஷ்மி விரதம்

  வரலக்‌ஷ்மி விரதம்

  இந்நிலையில், தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் வரலக்‌ஷ்மி நோன்புக்கு வாழ்த்து தெரிவித்து, போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் திருமணமான பெண் போல, நெற்றி வகிடில் பொட்டு வைத்து உள்ளார். மேலும், கணவன்மார்களுக்காக வழிபடும் வரலக்‌ஷ்மி விரதத்திற்கு யாஷிகா ஆனந்த் வாழ்த்து சொல்லியது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

  கல்யாணம் ஆகிடுச்சா

  கல்யாணம் ஆகிடுச்சா

  யாஷிகா ஆனந்தின் வரலக்‌ஷ்மி நோன்பு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி, உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு, லாக்டவுனில் சீக்ரெட் மேரேஜா? சொல்லவே இல்லை போன்ற பல கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த பிரைடல் லுக்கில் அழகா இருக்கீங்க என்றும், யாஷு செல்லத்துக்கு இந்த லுக் செட்டே ஆகல என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  யாஷிகா ஆனந்த் பிறந்தநாள்

  யாஷிகா ஆனந்த் பிறந்தநாள்

  1999ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்த நடிகை யாஷிகா ஆனந்த், வரும் செவ்வாய்க்கிழமை தனது 21வது பிறந்தநாளை கொண்டாட போறாங்க.. சில தீவிர ரசிகர்கள், இப்பவே அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே யாஷிகா எனவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல நடிகர்களின் பிறந்தநாள் காமன் டிபியை யாஷிகா வெளியிட்டாங்க, இவங்க பிறந்தநாள் டிபியை எந்த பிரபலம் வெளியிடுறாங்கன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

  English summary
  Yashika Aannand shared Varalakshmi Viratham wishes to her fans with her recent snaps. Fans who see the photos get shocked and asking are you married? These comments are going viral.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X