»   »  ரஜினி சார்.. உங்களுக்குப் பொய்யே பேச வராதே... அரசியல் ஒத்து வருமா? - சேரன்

ரஜினி சார்.. உங்களுக்குப் பொய்யே பேச வராதே... அரசியல் ஒத்து வருமா? - சேரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: களவும் ஊழலும் லஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா.. உங்களுக்கு பொய்யே பேசவராதே என்று ரஜினியை கேள்வி கேட்டுள்ளார் இயக்குனர் சேரன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்று அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி அரசியலுக்கு வருவேன் என்றும் இல்லாமல், வரமாட்டேன் என்றும் இல்லாமல் குழப்பமாக பேசியுள்ளார்.

ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து இயக்குனர் சேரன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

முதல்வர்

#Rajinikanthவணக்கம் சார். உங்களை முதல்வர் ஆக்கியே தீருவார்கள். அரசியல் சூழல் அதை உருவாக்கும்.. மக்களிடமும் நேர்மை குறைந்துள்ளதால் ஜாக்கிரதை.

ஒத்துவருமா

#rajinikanthகளவும் ஊழலும் லஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா.. உங்களுக்கு பொய்யே பேசவராதே.

சவால்கள்

#rajinikanthகர்நாடகாவை எதிர்க்கவேண்டும் இந்தி திணிப்பை ஆதரிக்ககூடாது இலவசங்கள் கொடுத்தே ஆகவேண்டும் மதுக்கடைகள் மூடக்கூடாது.. சவால்கள் நிறைய

களம் இறங்குங்கள்

#rajinikanthநீங்கள் நினைப்பது நடக்கவேண்டுமெனில் மக்களோடு களம்இறங்குங்கள் கலந்துபேசுங்கள் ஏரியாவாரியாக ப்ரச்னைகளை தெரிந்துகொள்ளுங்கள்

English summary
Director Cheran tweeted that Rajinikanth sir, will politics suit you as you don't know how to tell lies?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil