Don't Miss!
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Finance
பொருளாதார ஆய்வறிக்கை வெளியானது.. இந்திய பொருளாதாரம் 6-6.8% வளர்ச்சி அடையும்,..!
- News
பத்திக்கிருச்சே.. இதுக்குன்னே தனி வீடு.. ராகினியிடம் கெஞ்சிய குடும்பம்.. பரிதாப கணவன்.. அலறிய ஆவடி
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஹேப்பி பர்த்டே பிரசன்னா.. இணையத்தை கலக்கும் வாழ்த்து செய்தி!
சென்னை : இன்றும் இளமை மாறாமல் அதே துடிதுடிப்புடன் திரைப்படங்களில் இன்று வரை ரசிகர்களை ரசிக்க வைத்தும், பெண்கள் மனதை கொள்ளை அடிக்கும் கனவுக் கண்ணனாக வலம் வருபவர் நடிகர் பிரசன்னா.
Recommended Video
இயக்குனர் மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிரசன்னா இன்று வெர்ஸடைல் ஆக்டராக பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 28 ஆம் தேதியான இன்று இவர் தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மணிரத்னத்தின்
'பொன்னியின்
செல்வனி'ல்
இணைந்த
பிரபல
இயக்குனர்..
அக்டோபரில்
ஷூட்டிங்?

சாக்லேட் பாயாக
இயக்குனர் சுசி கணேசன் இயக்கிய "பைவ் ஸ்டார் " திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்ட பிரசன்னா பின் பெண்களின் மனதை கொள்ளை கொள்ளும் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.

இமேஜை உடைத்து
தனக்கென ஒரு இமேஜை வைத்துக்கொள்ளாமல் எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிரளவைத்து வரும் பிரசன்னா, அஞ்சாதே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சாக்லேட் பாய் என்ற இமேஜை உடைத்து எந்தவொரு கதாபாத்திரத்தையும் தன்னால் இயல்பாக செய்ய முடியும் என நிரூபித்தார்.

மிரண்டு போய்
2008 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே திரைப்படத்தில் முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரசன்னாவுக்கு ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் இவரின் நடிப்பை பார்த்து மிரண்டு போய் பாராட்டுகளை தெரிவித்ததோடு பல்வேறு விருதுகளையும் வென்றார்.

ரெட் ஒன் கேமரா
மேலும் ஹாலிவுட் ஆக்டர் ஜான் ஷேஹா, சினேகா உள்ளிட்ட பிரபலமான நடிகர்களுடன் இவர் இணைந்து வைத்திருந்த "அச்சமுண்டு அச்சமுண்டு" திரைப்படம் வெளிநாடுகளில் பல்வேறு விழாக்களில் திரையிடப்பட்டு சிறப்பு அந்தஸ்தை பெற்றதோடு, சிறந்த திரில்லர் திரைப்படம் என்ற பாராட்டுகளையும் பெற்று வந்தது. மேலும் இந்த திரைப்படம் இந்தியாவிலேயே முதல் முறையாக "ரெட் ஒன் கேமரா" சிஸ்டத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

ரசிகர் கூட்டத்தை
இவ்வாறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ள பிரசன்னா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழிகளிலும் பல சில திரைப்படங்களில் நடித்து அங்கும் மிகப் பிரபலமாக உள்ளார்.

சிக்ஸ் பேக் பிளேபாய்
ஒரே மாதிரி கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் பிரசன்னா திருட்டுப்பயலே 2-ல், சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் ஸ்டைலிஷான வில்லனாக நடிப்பில் அசத்தி இருப்பார்.

மாஃபியா
சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான மாஃபியா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்பொழுது துப்பறிவாளன் பாகம் 2-ல் நடித்தவாறு பல்வேறு திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து கொண்டு வருகிறார்.

38 வது பிறந்தநாள்
இவ்வாறு தமிழ் சினிமாவில் ரசிகர்களால் இன்றுவரை சிறந்த நடிகர் என போற்றப்பட்டு வரும் நடிகர் பிரசன்னா ஆகஸ்ட் 28 ஆம் தேதியான இன்று தனது 38 வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.