»   »  இது எப்படி நடந்தது, ஒன்னுமே புரியலையே: பரபரக்கும் திரையுலகம்

இது எப்படி நடந்தது, ஒன்னுமே புரியலையே: பரபரக்கும் திரையுலகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பேஃபிக்ரே இந்தி படத்தில் 40 முத்தக்காட்சிகள் இருந்தும் ஒரு காட்சியை கூட சென்சார் போர்டு கத்தரி போடாதது பலரையும் வியக்க வைத்துள்ளது.

ஆதித்யா சோப்ரா தயாரித்து இயக்கியுள்ள படம் பேஃபிக்ரே. ரன்வீர் சிங், வாணி கபூர் நடித்துள்ளனர். படம் வரும் டிசம்பர் மாதம் 9ம் தேதி ரிலீஸாகிறது.

With 40 kissing scenes, Befikre comes out uncut from Censor board

படத்தில் ரன்வீரும், வாணியும் எதற்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்கு என்று லிப் டூ லிப் கொடுத்துக் கொள்கிறார்கள். படத்தில் மொத்தம் 40 முத்தக் காட்சிகள். சும்மாவே சென்சார் போர்டு கத்தரி போடுவார்கள், இந்த படத்திற்கு ஏகப்பட்ட கத்தரி தான் என்று பலரும் கூறினர்.

இந்நிலையில் சென்சார் போர்டு ஒரு முத்தக் காட்சிக்கு கூட கத்தரி போடாமல் யுஏ சான்றிதழ் அளித்துள்ளது. இப்படி சென்சார் போர்டு ஒரு முத்தக் காட்சியை கூட நீக்காதது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

அண்மையில் வெளியான ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய் இடையேயான முத்தக் காட்சிகளுக்கு சென்சார் போர்டு கத்தரி போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
People from film industry couldn't control their surprise after Befikre comes out uncut from Censor board with 40 kissing scenes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil