twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொல்கத்தாவில் வீசுது “லிங்கா” அலை – குதூகலத்தில் ரசிகர்கள்

    |

    கொல்கத்தா: கொல்கத்தாவிலும் லிங்கா அலையாக இருக்கிறதாம். கொல்கத்தாவில் திரையிடப்பட்டுள்ள லிங்கா படத்தை தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாக போய்ப் பார்த்து வருகின்றனராம்.

    மேலும் ரஜினி செய்யும் சண்டைக் காட்சிகளை குஷியுடன் உற்சாகாக கூக்குரலிட்டு ரசிக்கிறார்களாம் கொல்கத்தா ரஜினி ரசிகர்கள்.

    மற்ற நகரங்களைப் போலவே கொல்கத்தாவிலும் ரஜினி ரசிகர்கள் லிங்கா தியேட்டர்களை மொய்த்துக் கொண்டுள்ளனர்.

    மொய்க்கும் தமிழர்கள்:

    மொய்க்கும் தமிழர்கள்:

    மேலும் அங்கு திரையிடப்பட்டுள்ள படத்தைப் பார்க்க குடும்பம் குடும்பமாக வருகிறார்களாம். மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ள, ரஜினி நடித்த படம் என்பதால் பெரும் ஆர்வத்துடன் தியேட்டர்களை மொய்க்கிறர்கள் தமிழர்கள்.

    உற்சாகத் தமிழர்கள்:

    உற்சாகத் தமிழர்கள்:

    அதை விட முக்கியமாக முன்பெல்லாம் கொல்கத்தாவில் உடனடியாக எந்த புதுப் படமும் வருவதில்லையாம். சில மாதங்கள் கழித்துத்தான் தமிழ்ப் படங்களை இங்கு பார்க்க முடியும். ஆனால் லிங்காவை உடனடியாக ரிலீஸ் செய்துள்ளதால் தமிழர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    மகிழ்ச்சிக் கடலில் மக்கள்:

    மகிழ்ச்சிக் கடலில் மக்கள்:

    இது எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழத்தியுள்ளது. லிங்கா அலையில் நாங்களும் இணைந்து விட்டோம் என்று படம் பார்க்க வந்த குமார் என்பவரும், அவரது மனைவி சாந்திகுமார், மகள் சங்கீதா ஆகியோர் கூறினர்.

    நிம்மதியான படம்:

    நிம்மதியான படம்:

    ஒவ்வொரு தமிழரும் ரஜினி படத்தை மிகுந்த உற்சாகத்துடன் பார்க்கிறார்கள். குறிப்பாக குடும்பத்துடன் நிம்மதியாக அமர்ந்து பார்க்க வசதியாக இருப்பது ரஜினி படம்தான் என்பது சாந்திகுமாரின் கருத்தாகும்.

    திருவிழாக் கொண்டாட்டம்:

    திருவிழாக் கொண்டாட்டம்:

    சிவக்குமார் என்பவர் கூறுகையில், எனது நண்பர்கள், அக்கம் பக்கத்தினரை சந்திக்கவும், பார்க்கவும், பேசவும் இந்தப் படம் உதவியாக இருந்தது. ஏதோ திருவிழா போல உணர்கிறேன் என்றார்.

    லிங்காவிற்கு வரவேற்பு:

    லிங்காவிற்கு வரவேற்பு:

    கொல்கத்தாவில் அளவிலா தமிழர்கள் உள்ளனர். அவர்களின் தேவையை தற்போதுதான் கொல்கத்தா தியேட்டர்கள் பூர்த்தி செய்ய ஆரம்பித்துள்ளனவாம். டிசம்பர் 12 ஆம் தேதியன்று கொல்கத்தாவிலும் லிங்கா ரிலீஸானது. நல்ல வரவேற்புடன் ஓடிக் கொணடிருக்கிறதாம்.

    மெட்ராஸ் பீலிங் வருது:

    மெட்ராஸ் பீலிங் வருது:

    கொல்கத்தாவுக்கு வந்து தற்போது பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த என்ஜீனியர் குருராஜன் கூறுகையில், கொல்கத்தாவில் தமிழ் படங்களுக்கு இவ்வளவு ஆதரவு இருப்பது ஆச்சர்யம் தருகிறது என்றார். மெட்ராஸில் படம் பார்ப்பது போலவே இருக்கிறது என்றார் குருராஜன்.

    அமர்க்களமான ரஜினி படம்:

    அமர்க்களமான ரஜினி படம்:

    தீபா ஆஞ்சநேயன் என்பவர் ரஜினி படம் என்றால் ஆக்ரோஷம், அட்டகாசம், அமர்க்களம்தான். ஆனால் கொல்கத்தாவில் அதை இத்தனை காலமாக மிஸ் செய்தேன். ஆனால் லிங்கா மூலம் அது நிறைவேற்றி விட்டது. அமர்க்களமாக ரசித்துப் பார்த்தேன் என்றார் ஜாலியாக கூக்குரலிட்டபடி.

    English summary
    They roar in unison as their favourite 'Thalaiva' leaps into air from his speeding bike, meandering along a hilly track to land on a wobbling hot-air balloon about to crash into a dam. As he punches the villain and clings on to the edge of the balloon's basket, the desperate heroin clutching his other arm, they move to the edge of their seats.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X