For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லை மீறினால் எதையும் செய்வாள் பெண் - மிருகா சொல்லும் செய்தி

|

சென்னை: எலியும் பூனையும் போல வேகமாக நகரும் கதையில் ஒரு கட்டத்தில் கொலைகாரனின் பித்தலாட்டம் எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது மிருகா திரைப்படம்.

சென்னையை மையமாகக் கொண்டு, பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 1000 எபிசொடுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த கலை கற்பனை நயமிக்க தயாரிப்பாளரான வினோத் ஜெயின், முதல் முறையாக திரைப்படத் துறையில் இத்திரைப்படத்தின் மூலம் தடம் பதிக்கிறார்.

woman can resist anything she finds complicated-Mirugga

இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணம் கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான்.

அந்தப் பெண்ணையும் அவன் ஏமாற்ற நினைக்கும் போது, விதி வேறு விதமாக விளையாடுகிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் இக்கதையில், ஒரு கட்டத்தில் இவனது பித்தலாட்டம் எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது மிருகா திரைப்படம்.

இப்படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி உடன் இணைந்து தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.வீ பன்னீர்செல்வம் கதை, திரைகதை, ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இப்படத்தை இயக்குகிறார்.

பார்த்திபன் அடையார் திரைப்பட கல்லூரியில் டிஎஃப்டி பயின்றவர். அதோடு பல விளம்பரப் படங்களை இயக்கி, இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

சுதர்சன் படத்தொகுப்பை வேலையை கவனித்துக்கொள்ள, மிலன் & எஸ் ராஜா மோகன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, அதிரடி சண்டை காட்சிகளை தளபதி தினேஷ் மற்றும் ஸ்ரீதர் அமைத்திருக்கிறார்கள். அருள் தேவ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். மக்கள் தொடர்பு பணியை நிகில் முருகனும் கவனித்துக்கொள்கிறார்.

ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொள்ளாச்சி, மூணாறு, தலைக்கோணம், சென்னை, ஊட்டி, மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் அருமையான காட்சியமைப்புகளுடன் உருவாகியிருக்கும் 'மிருகா' வெகு விரைவில் வெளியாக இருக்கிறது.

English summary
At one point in the fast-moving story of rat and cat, the killer's iniquity transgresses. Mirugaa films have been strongly documented that a woman can resist anything she encounters in a complex situation.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more